வல்வைக்கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள உயிர்வரை இனித்தாய் திரைப்படம் எதிர்வரும் 22.03.2014 சனிக்கிழமையன்று முதலாவது காட்சியாக திரைக்கு வருகிறது.
டென்மார்க் கேர்னிங் நகரில் உள்ள நோடிஸ் திரையரங்கில் பி.ப. 13.00 மணிக்கு திரைத்திருவிழா ஆரம்பிக்கிறது.
ஒரு திரையரங்கில் தமிழ் மக்களுக்கும் இன்னொரு திரையரங்கில் டேனிஸ் மொழி சப்டைட்டிலுடன் டேனிஸ் மக்களுக்குமாக ஒரே நேரத்தில் இரண்டு திரையரங்குகளில் அறிமுகவிழா நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் டேனிஸ் அரசியல் தலைவர்கள், ஐரோப்பாவின் முன்னணிக்கலைஞர்கள் சிறப்பாக பங்கேற்கிறார்கள்.
திரைப்பட நடிகர்கள், புலம் பெயர் திரைப்பட நடிகர்கள் லிமோசினி வாகனத்தில் கேர்னிங்நகரைச் சுற்றி ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்கள்.
திரையரங்கில் செங்கம்பள வரவேற்பு, அலங்கார சோடனைகள் என்று பிரமாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரைப்படத்தில் நடிப்போரின் ஆடை அலங்கார அணிவகுப்பு, ரசிகர்கள் அலங்கார அணிவகுப்பென்று புதிய கோணத்தில் விழா ஏற்பாடாகியுள்ளது.
இப்பொழுதே இரண்டு திரையரங்குகளும் நிறைந்துவிட்டன, இதைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் காண்பிக்கப்படவுள்ளது, ஐரோப்பா இந்தியா முதல் உலகம் முழுவதிற்குமான பயணம் ஆரம்பிக்கவுள்ளது.
இங்கிலாந்து முதற்கொண்டு பல நாடுகளில் இருந்தும் வல்வைக் கலைஞர்கள் நேரடியாக பங்கேற்கிறார்கள்.
கே.எஸ்.துரையின் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.
இந்தத் திரைப்படத்தின் முக்கிய பாத்திரத்திலும், இசையமைப்பாளராகவும், எடிட்டர், டிஜிற்றல் இமேஜ், சரவுண்ட், டி.சி.பி போன்ற பணிகளை வல்வை வஸந்த் செய்துள்ளார்.
புலம் பெயர் நாடுகளில் இந்தத் திரைப்படம் முக்கிய அவதானிப்பை பெற்றுள்ளது.
முதலாது காட்சி முடிந்த பின்னர் அதனுடைய அடுத்த பரிமாணம் ஆரம்பிக்கும்.
அன்றைய தினம் மாலை சர்வதேச புலம் பெயர் திரைப்படக் கலைஞர்களும், உயிர்வரை இனித்தாய் திரைப்பட கலைஞர்களும் பங்கேற்கும் சிறப்பு விருந்துபசாரம் இடம் பெறவுள்ளது.
அத்தருணம் அடுத்த கட்ட திரைப்பயணம் தொடர்பான கருத்தரங்கும் நடைபெறும்.