லண்டன் வாழ் 16 நண்பர்களால் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான உதைபந்தாட்ட ஆடைகள் மற்றும் காலனிகள் வல்வை விளையாட்டு வீரர்களுக்கு இன்று வல்வையில் அன்பளிப்பாக வழங்கினர். பொருட்களை பெற்றுக்கொண்ட வீரர்களும் நிர்வாகத்தினரும் 16 நண்பர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர். நிர்வாகத்தின் சார்பில் கருத்து தெரிவித்த கழகத்தின் போசகர் தங்கவேல் அண்ணா அவர்கள், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், எல்லே, கபடி, மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் ஆண்கள், பெண்கள் இரு அணியினரும் பல வெற்றிகளை பெற்று வல்வை மண்னிற்கு பெருமை சேர்த்து வருவதாக தெரிவித்ததுடன் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழாவின் உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் புதிய சீருடையுடன் வல்வை அணி முதல் முறை விளையாடும் எனவும் கூறினார்.
புலம் பெயர்ந்து வாழும் வல்வை மக்களிடமும் நலன்புரிச் சங்கங்களிடமும், வல்வை விளையாட்டுக்கழகம் தொடர்ந்து பாரிய உதவி எதிர்பார்த்திருப்பதை தவறாது குறிப்பிடும்படி கேட்டுக்கொண்ட தங்கவேல் அண்ணா 16 நண்பர்களுக்கும் மறுபடியும் தமது நன்றிகளை தெரிவித்தார்.
16 நண்பர்கள்
லண்டனி வசித்து வரும் 16 நண்பர்கள் இணைந்து சுமார் 10 வருடங்களுக்கு மேலாக லண்டனில் வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பாரிய நிதி உதவியை வழங்கிவருகின்றனர். இவர்களே இன்று வல்வை விளையாட்டு வீரர்களுக்கு வல்வையில் அன்பளிப்புக்களை வழங்கினர். 16 நண்பர்களுடைய பெயர்கள் பின்வருமாறு.
1.சிறீதரன் 2.அருணாசலம் 3.இந்திரலிங்கம் 4.பழனிவேல்ராஜன் 5.செல்டன் 6.ஜெயக்குமார் 7.ஜீவன் 8.ரமேஸ் 9.வெற்றிவேல் 10.விமலன் 11.காண்டீபன் 12.குமரன் 13.கிஷோக் 14.பகிரதன் 15.கரிச்சரண் 16.ராஜன்