வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் பாலஸ்த்தாபனம் செய்யப்பட்டு, புனருத்தான திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 29.06.2014 (ஆனி – 15) எண்ணெய்க்காப்பு நடைபெற்று, 30.06.2014 ( ஆனி – 16) அன்று மஹாகும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளதனால், விநாயகர் அடியார்களிடமிருந்து திருப்பணிவேலைகளுக்கான நிதிஉதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருப்பணிவேலைகளின் படங்களும், ஆலயப்பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்ட நிதி வேண்டுகோள் பிரசுரமும், 2014-2015 ஐய வருஷ விஷேட உற்சவங்கள் பற்றிய பிரசுரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.