வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபைத் தெரிவுக் கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் (20.04.2014)முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் பருத்தித்துறை பிரதேச தலைவர், மற்றும் கிராம சேவையாளர்கள்,மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றுள்ளது. திரு.சேதுலிங்கம் தலைவராகவும் , செயலாளராக ஜெயராஜ் அவர்களும்,பொருளாளராக தெய்வேந்திரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இன்றைய கூட்டத்தில் 1000 ற்கு அதிகமானோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பித்தக்கது.
முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
