இங்கிலாந்தில் வருமான பற்றாக்குறை காரணமாக பகுதி நேர வேலை செய்வோர் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரித்துள்ளது என்று வர்த்தக யூனியன் (டியுசி) ஆய்வு தெரிவிக்கிறது. சர்வதேச நிதி நெருக்கடியால் இங்கிலாந்தில் பெரும்பான்மையினர் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது.
மேலும், போதிய வருமானம் கிடைக்காததால் நிரந்தர வேலைக்கு செல்பவர்கள் பகுதி நேர வேலைக்கு செல்வது அதிகரித்து வருகிறது. அதன்படி, 2007ல் 2.93 லட்சமாக இருந்து பகுதி நேர வேலைக்கு சென்ற ஆண்கள் எண்ணிக்கை, 2011 டிசம்பரில் 6 லட்சமாக உயர்ந்தது. தொழிலாளர்கள் மற்றும் சுய தொழில் செய்யும் 14 லட்சம் பேரில் பெரும்பான்மையினர் வருமான பற்றாக்குறையால்தான் பகுதி நேர வேலைக்கு செல்வதாக தெரிவித்தனர்