முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை!

 

முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் தமிழ்மக்களின் எதிர்ப்பினையும் மீறி சிறிலங்கா படையினர் பாரிய புத்தர் விகாரை ஒன்றினை அமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்கால் போரின் போது அங்கிருந்த வெளியேற்றப்பட்ட அப் பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற்றம்செய்யப்டாமல் உள்ள இந் நிலையில் சிறிலங்கா படையினர் இவ்வாறான ஒரு செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றது.

வெட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு திடலில் இந்த புத்தர் விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாக்கால் முல்லைத்தீவு வீதி மக்களின் பாவனைக்கா திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அங்கு நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் இவ்வாறான பௌத்த வளிபாட்டு தலங்களை கட்டி தமது மதத்தினை பரப்பும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் சிறீலங்காப்படையினரின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையினை எடுத்துக்காட்டும் தமிழ் மக்கள் படைப்புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மக்கள் கவலைவெளியிட்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.