உலகத் தமிழ் அமைப்பு மற்றும் தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைத்து சென்னையில் மே- 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வில் ஆடிய பெண் நிதி சர்மா.
இவரது தாய் மொழி இந்தி. இவரது தந்தை சீனிவாஸ் திவாரி. ஈழப் படுகொலையை பற்றி அறிந்த நாள் முதல் ஈழத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவரது பெண்ணை இந்த நிகழ்வில் ஒரு எழுச்சி பாடலுக்கு நடனம் ஆட அனுமதி தர வேண்டும் என ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டார். இவரது நல்ல எண்ணத்தை கருத்தில் கொண்டு ஏற்பாட்டாளர்கள் இவரது பெண்ணை இந்த நிகழ்வின் முதல் பாடலான முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் என்ற பாடலுக்கு ஆடும் படி கேட்டுக் கொண்டனர்.
யாரும் நினைத்திருக்காத வகையில் செல்வி நிதி மிகச் சிறப்பாக பல் வேறு முக பாவனைகளுடன், கண்களில் வீரத்துடன், சோகத்துடன் தாய் மண்ணுக்கான பாடலுக்கு நடனமாடி அனைவரையும் நெகிழ வைத்தார். இப்படி வட நாட்டுப் பெண்ணான இவருக்கும் இவரது தந்தைக்கும் இருக்கும் உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் வர வேண்டும் என்பதே நம் ஆசை. செல்வி நிதியை பாராட்டி பரிசும் வழங்கிக் கொளரவிக்கப்பட்டது.
தமிழகத்திலே கலைகளில் சிறந்த எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். தாம் கற்றறிந்த கலையின் மூலம் இனத்தின் விடியலிற்கு பங்களிப்பு செய்வதற்கு எந்த தமிழ்க் கலைஞர்களும் முன்வராத போது ஆர்வம்காட்டாத நிலையில் இந்த இனத்தால் மொழியால் அன்னியப்பட்ட இந்த பெண் எழுச்சிப்பாடலிற்கு நடமாடியிருப்பது பாராட்ட வேண்டிய விடையமாகும். அதிலும் இவ்வாறான நிகழ்வில் கலந்துகொண்டு நடனமாடுவதற்கு தமது மகளை அனுமதித்த பெற்றோரிற்கு பெருமைப்படுத்த வேண்டும்.
அரசியல் கட்சிகளின் மாநாடுகளில் கற்றகலையினை காசாக்கி கலைத்துரோகம் செய்யும் நம் தமிழகத்து கலைச் சகோதரர்கள் நிச்சயமாக இனியாவது திருந்தவேண்டும்.