வல்வெட்டித்துறையின் கல்விவளர்ச்சியிலும் அறிவை ஊட்டி எம்மை உருவாக்கியதிலும் ஆழமான பங்கு வகிப்பது சிதம்பராகல்லூரி என்ற ஆலயம் ஆகும்.
எமது முந்தைய பலபல தலைமுறை தலைமுறைகள் இங்கு கல்வியும் அறிவும் பெற்றதால்தான்
எமது ஊர் அனைத்து துறையிலும் சிறந்து விளங்க முடிந்தது.
இன்று இந்த சிதம்பராகல்லூரியின் நிலை என்ன??
நாம் விளையாட்டிலோ அல்லது வேறு செல்லத்திலோ எவ்வளவு தூரம் சென்றாலும் எவ்வளவு வெற்றிகளை பெற்றாலும் எமது ஊரின் கல்விநிறுவனம் ஒன்று சிறப்பாக இல்லாது விட்டால் நமது அத்தனை சிறப்புகளும் அழிந்தும் கவனிப்பார் இன்றியும் போய்விடும்.
எனவே சிதம்பராகல்லூரியை மீண்டும் சிறப்பானதாக கட்டி எழுப்ப நாம் அனைவரும் ஒன்று திரண்டு எழ வேண்டும்.
அதற்கான ஒரு முன்னோட்டமாக கலந்துரையாடலும் பொதுக்கூட்டமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
காலம்: 07.07.2012 (சனிக்கிழமை) மாலை 7மணி முதல் 10 மணிவரை
இடம்: வல்வை அரங்கம்.சிவன்கோவில்(மிற்சம்)
அனைவரும் தவறாது வந்து தமது கருத்துகளை தெரிவித்து எமது சிதம்பராவை எப்படி மீண்டும் யாழ்ப்பாணத்தின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக அனைத்து வசதிகளும் நிறைந்த முதல்தர கல்லூரியாக கட்டி எழுப்ப முடியும் என முடிவுசெய்வோம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.