சிங்களதேசத்தின் அரசியல்யாப்பு வல்வையில் தீவைத்து கொளுத்தப்பட்டது.

சிங்கள பௌத்த குடியரசின் அரசியல்அமைப்பு யாப்பு 22.05.2012(செவ்வாய்) அன்று வல்வெட்டித்துறை ஊறணியில் வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.காலை 8:30மணியளவில் வாகனம்ஒன்றில் திடீரென வந்த
ஆறு,ஏழு இளைஞர்கள் சிங்களதேசத்தின் அரசியல்யாப்பை தீவைத்து கொளுத்துவிட்டு மிக வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் அங்கு நிலைகொண்டுள்ள சிங்களபடைகள் மத்தியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
யார் இதனை செய்தது என்றும் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதும் தெரியாமல் இருக்கிறது.
ஆனாலும் நேற்றும் இன்றும் வல்வெட்டித்துறையிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சிங்களபுலனாய்வாளர்கள் மக்களை தடுத்து நிறுத்தி இதனை பற்றி விசாரித்து வருகிறார்கள்.
இந்த சிங்களதேச அரசியல்யாப்பு உருவாக்கப்பட்ட 1972ம்ஆண்டிலேயே இதனை பகிரங்கமாக தமிர்கள் தீயிட்டு கொளுத்தி தமது அடையாள எதிர்ப்பை காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.