மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இனங்கானப்படாத மோட்டார் சைக்கில் ஒன்றுகண்டெடுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பிரதேச வைத்திய சலைக் வளாகத்தினுள் இருந்தே குறித்த இனங்கானப்படாத மோட்டார் சைக்கில்மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
விசேட குற்தத் தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்ட குறித்த மோட்டார் சைக்கில் தொடர்பான விசாரணைகள்தொர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித் துறை பிரதேச வைத்திய சாலைக்கு வெளிநாட்டில் வசித்துவந்த அப்பகுதியினைச் சேர்ந்த பெது மகன் ஒருவரால் குறித்த காணி வைத்திய சாலைக்கு கையளிக்கப்பட்டதுஎன்றும், வைத்திய சாலை நிர்வாகத்திற்கு குறித்த மோட்டார் சைக்கில் புதைக்கப்பட்டது தொடர்பாக எந்தவிதமானதொடர்பும் இல்லை என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளினதா அல்லது திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாஎன்னும் ரீதியிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: சங்கதி24.கொம்
www.sankathi24.com