பிறப்பு : 30 டிசெம்பர் 1936 — இறப்பு : 18 மே 2014
யாழ். வல்வெட்டித்துறை நாவலடியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 18-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
இராசகுமார்(சுவிஸ்), நிர்மலா, ஸ்ரீரஞ்சினி(நோர்வே), மோகன்(கனடா), பிரபாகரன்(கனடா), ராஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வள்ளியம்மை, தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான பத்மேஸ்வரி, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருப்பதி(சுவிஸ்), உதயரூபன்(அதிபர், யா/கெருடாவில் இ.த.க பாடசாலை), ஜெயரூபன்(நோர்வே), சிவதர்சினி(கனடா), புஸ்பரஞ்சினி(கனடா), திருச்செந்தூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌசிகன்(சுவிஸ்), தர்னிகா(சுவிஸ்), லதுசோபன்(யா/ஹாட்லி கல்லூரி), நம்ரிதா(யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி), காருண்யா(நோர்வே), காவ்யா(நோர்வே), கிசான்(கனடா), மோனிஷன்(கனடா), கேசிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பதினர்
தொடர்புகளுக்கு
_ — இலங்கை
தொலைபேசி: +94212260181
செல்லிடப்பேசி: +94778010212