புதுப் பொலிவோடு உருவாகி வரும் தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானம்.

புதுப் பொலிவோடு உருவாகி வரும் தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானம்.

வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானம் கடந்த 3 வாரங்களாக திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றது.ஏற்கனவே வல்வையில் உள்ள மைதானங்களில் இந்த மைதானம் தான் வசதிகள் கூடிய மைதானமாக இருந்து வந்தது.ஆனால் மழை காலங்களில் ஏற்படும் சிரமங்களால் பல போட்டிகள் தடைப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.இதனைக் கருத்திற் கொண்டும், அனைத்துப் பிரிவுப் போட்டிகளையும் நல்ல முறையில் நடாத்துவதற்கு வசதியாகவும்,மைதானத்தை தொடர்ச்சியாக நல்ல முறையில் பேணிப் பாதுகாக்கவும், தீருவில் இ.வி. கழகத்தால் பல லட்ச ரூபாய் செலவில் இந்தப் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது தீருவில் குளத்தில் இருந்து மேலதிகமாக மண் போடப்பட்டு மைதானம் உயர்த்தப்படுகிறது. இனிமேல் மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடுவதற்கென மைதான அமைப்பை மாற்றியமைக்க, திறமையான கட்டிடக் கலை நிபுணர்கள், மற்றும் நில அளவையாளர்கள் உதவியோடு அனைத்து வேலைகளும் கச்சிதமாகமுன்னெடுக்கப்படுகின்றன.

வல்வையில், தரமான புல் தரை கொண்ட, அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடக் கூடியவாறும்,மற்றும் மின்னொளியில் போட்டிகள் நடாத்துவதற்கும் வசதிகள் கொண்ட நல்ல மைதானம் ஒன்று உருவாகிக் கொண்டு வருகின்றது என தீருவில் இளைஞர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.