31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டியும் நன்றிநவிலலும்
அமரர் தர்மராசா விஜயலட்சுமி
(ஜெயா)
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1956 — இறப்பு : 18 யூன் 2012
திதி : 17 யூலை 2012
வல்வெட்டித்துறை ஆலடி வடக்கு ஒழுங்கை ஆதிகோயிலடியைப் பிறப்பிடமாகவும்இ திருச்சி உறையூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மராசா விஜயலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி அந்தியேட்டி அழைப்பும் நன்றிநவிலலும்.
எமது குடும்பக் கோயிலில்
தெய்வமாகிய எம் தாயே
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்ட அன்னையே
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி…!!! ஓம் சாந்தி…!!! ஓம் சாந்தி…!!!
எம் குடும்பத்தலைவியை பறிகொடுத்து தவித்திருந்த போதுஇ எம் துயரில் பங்கு கொண்டு நேரிலும்இ தொலைபேசியில் எங்களுடன் கூட நின்று பல வழிகளில் எங்களை ஆறுதல் தந்த எங்கள் உறவினர்இ நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
17-07-2012 செவ்வாய்க்கிழமை அன்று உறையூர் நாச்சியார் பாளையம் இல09 இல் அமைந்துள்ள அன்னை இல்லத்தில் நடைபெறவுள்ள அந்தியேட்டி நிகழ்வில் கலந்து அன்னையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்துஇ மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கணவன்இ பிள்ளைகள்இ பேரப்பிள்ளைகள்இ மருமக்கள்
தொடர்புகளுக்கு
தர்மராசா(கணவர்) — இந்தியா
தொலைபேசி: +914312751099
செல்லிடப்பேசி: +919443206092