6வது நாளாக தொடரும் சிவந்தனின் உண்ணாவிரதம்!
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சிவந்தன் அவர்களால் ஒலிம்பிக் பூங்காவிற்கு அருகில் தொடங்கப்பட்ட உண்ணாவிரத போராட்டமானது இன்று 6வது நாளாக தொடர்கின்றது.
உடலில் தளர்வுகள் ஏற்பட தொடங்கியுள்ளது.மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றார்கள். மக்கள் வருகை சிறிது சிறிதாக அதிகரித்து வருகின்றது. தொடர்ந்தும் பெரும் எடுப்பிலான மக்கள் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என பிரித்தானியாவின் தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றது.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, இன்று மகிந்தவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஏற்பாடு செய்து அழைப்பும் விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 4 மணி அளவில் மகிந்தவின் வருகைக்கு எதிராக பல நாட்டு தலைவர்கள் ஒலிம்பிக் பூங்காவிற்கு செல்லும் வழியில போராட்டத்திற்கு பிரித்தானியக் காவல்த்துறை அனுமதி வழங்கியுள்ளது. கீழ்கானும் இடத்திலேயே போராட்டம் நடைபெறும்