10வது நாளாக சிவந்தன் உண்ணாவிரதம் தொடருவது யாருக்காக? – சுத்த சுயநலவாதியா நீங்கள்?
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சிவந்தன் அவர்களால் தொடங்கப்பட்ட உண்ணாவிரதம் இன்றுடன் பத்தாவது நாளை எட்டியுள்ளது.
கறுப்பு ஜுலை மாதத்தின் 22ம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.
2,3 மணி நேரங்கள் கடந்தாலே உணவு கேட்டும் சாதாரண மனிதர்களுக்கு மத்தியில், இந்த கோடை காலத்திலும் உணவை விட உரிமையே முக்கியம் என உருக்கும் வெய்யிலில் உணவை மறுத்து போராடும் சிவந்தனுக்கு ஆதரவு கொடுத்து திரண்டு நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடைமை.இதை மறப்பவர்களை வரலாறு மன்னிக்காது, போராட வராதவன் வெறும் ஜடம் இது எமது தமிழீழத் தேசியத் தலைவர் சொன்னது.
புலம் பெயர்ந்து வாழும் அனைவரும் கண்டிப்பாக இப்போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும். இது உங்களுடைய போராட்டம், உங்களுக்காகவும் சேர்த்துதான் இங்கு போராட்டம் நடைபெறுகின்றது. அதிகமாக தமிழர்கள் திருப்பி அனுப்பப்படாமைக்கும், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டதற்கும், புலம்பெயர் நாடுகளில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களும் மிக முக்கிய காரணம்.
எல்லாம் கிடைத்துவிட்டது இனி போராடி என்ன என்றும், நாம் மட்டும் போகாவிட்டால் என்ன மாற்றம் வரப்போகின்றது என கேட்பவர்கள் சுத்தமான சுயநலவாதிகள். இன்றைய காலகட்டத்தில் போராட்டங்களுக்கு திரளும் கூட்டங்களை விட கோடை விழாக்களுக்கு அதிகமான கூட்டம் திரளுவது துன்பத்திலும் துன்பம்.
குடும்பம், கடமை, பெறுப்பு, வேலை என்பது எல்லோருக்கும் பொதுவானது அனைவருக்கும் அது கட்டாயமும் கூட ஆனால் அதை விட முக்கியமானது உரிமை. மற்றவர்களால் முடியும் என்றால் ஏன் உங்களால் முடியாது? சிந்தியுங்கள் உடனே செயற்படுங்கள நீங்கள் சுத்த சுயநலவாதி இல்லையென்றால்.
சில அமைப்புக்கள் தங்களுக்கு உண்ணாவிரதம் பற்றி அறிவிக்கவில்லை என குற்றம் சுமத்துவதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் மைல்கள் அப்பால் உள்ள தமிழகத்தில் சிவந்தனுக்கு ஆதரவாக தனியாக போராட்டமே நடாத்தி முடித்திருக்கின்றார்கள் அருகில் இருக்கும் இவர்கள் தங்களிடம் முன்பே சொல்லவில்லை என்பது மிகவும் வேடிக்கையானது.
அனைவரையும் அழைத்துச் சொல்ல இது திருமணமோ அல்லது பிறந்தநாள் நிகழ்வோ அல்ல மாறாக போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கு அழைப்பிதழ்கள் எல்லாம் அனுப்புவதில்லை, அப்படி அனுப்பினால் அது போராட்டமும் அல்ல அது விழா டெசோ மாநாட்டு விழாவுக்கு அனுப்புவார்கள் அழைப்பிதல் வேண்டுமானால் போய் போராடிவிட்டு வாருங்கள்.
சொல்லாமலேயே தமிழகத்தில் பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து காணொளிகள் வெளியிட்டு விட்டார்கள். இனி நாம் சொல்ல வேண்டியது எதுவுமில்லை.
உங்களால் ஒரு மணி நேரம் அங்கு வந்து நின்று குரல் கொடுக்க முடியாதா? நீங்கள் ஒவ்வொருவரும் வந்தால் பல ஆயிரங்களைத் தொடும் இப்போராட்டம் உலகின் கவனத்தை இலகுவில் பெற்றுவிடும்.
உரிமைகளை விரும்பும் தமிழனாக இருந்தால் உங்களைத் தடுக்கும் அமைப்புகளை புறந்தள்ளி விட்டு வாருங்கள் உங்களைத் தடுக்கு சுயநலவாதிகளை மிதித்துவிட்டு வாருங்கள், நாளைய புரட்சி நமது கைகளில்
சிவந்தனின் கோரிக்கைகள்..
1. தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை தடைசெய்ய வேண்டும்.
2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரனை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும்.
3. தமிழீழத்தில் அதிவேகமாக நடைபெற்று வரும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.
4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும்.
5. தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவிற்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை திருப்பி அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்.