வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுகழகம் வருடந்தோறும் நடத்தும் விளையாட்டு நிகழ்வுகள் இன்று ரேவடியில் ஆரம்பமாகியுள்ளது.இன்று காலை கடல் விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நீச்சல்,கட்டு மரம் வலித்தல்,கடலில் ஓடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.தொடர்ந்து இன்று மாலையும்,நாளை மற்றும் நாளை மறுதினமும் மைதான விளையாட்டு நிகழ்வுகளும்,ஏனைய விளையாட்டுக்களும்,பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெறும்.தொடர்ந்து நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளின் புகைப்படங்களையும் இணைப்போம்.