Search

தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நேதாஜி எதிர் றெயின்போ 28.09.2014

விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் வல்வை றெயின்போ அணி வெற்றி ..
வல்வை தீருவில் விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 9 நபர்கள் கொண்ட  உதைபந்தாட்ட  சுழற் கிண்ண சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று மாலை 4:30 மணிக்கு வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது இதில் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து வல்வை றெயின்போ அணி மோதியது.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியிலேயே றெயின்போ அணி வீரர்களான  கவி, பிரகாஸ்  ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப்போட்டு  2 கோல்களுடனும் பிரணவன்  தண்ட உதை(panalty) மூலமும் றெயின்போ அணி 3:0 என முன்னிலை பெற்றது.

அடுத்த பாதி ஆட்டத்தில் வல்வை நேதாஜி அணி வீரர்களான ரசிகரன்,முகுந்தன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப்போட்டனர். எனினும் ஆட்ட நேர முடிவில் வல்வை றெயின்போ அணி 3:2 என்ற கோல்கள் அடிப்பபடையில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

இது தொடர்ந்து இரண்டாவது முறையாக றெயின்போ அணி சுழற்கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது

 




Leave a Reply

Your email address will not be published.