கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போரில் தான் கொலை செய்த வீரரின் குடும்பத்தை, முன்னாள் வீரர் ஒருவர் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.
பிரித்தானியா– அர்ஜென்டீனா இடையே 1982-ம் ஆண்டு நடைபெற்ற பாக்லாந்து போரில் பிரித்தானிய ராணுவ வீரர் கார்டன் ஹோகன் அர்ஜெண்டீனாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவரை கொலை செய்துள்ளார்.
போரில் எதிர் நாட்டு வீரர்களை கொல்வது இயல்பு என்பதால் அப்போது அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்ட கார்டனின் மனைவி 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார்.
இதுபோல வாழ்க்கையில் நடந்த சில சோக நிகழ்வுகளால் கார்டன் கடுமையாக பாதிக்கப்பட்ட அவருக்கு, அர்ஜெண்டீனா வீரரை கொலை செய்ததும் பெரிய உறுத்தலாக தோன்றியுள்ளது.
இதையடுத்து தான் கொலை செய்த வீரரின் குடும்பத்தினரை சந்தித்து மன்னிப்புக் கேட்கவும், கொலை செய்த வீரரின் தலை கவசத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்து, அவர்களை தேடி வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், அவரை கொலை செய்ததால் பல இரவுகளை தூக்கமின்றி கழித்துள்ளேன். அவரது குடும்பத்தினர் என்னை எதிரியாகவே பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும் எனது மனசாட்சி உறுத்தல் காரணமாக அவரது குடும்பத்தை சந்திக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.








