Search

நியுயார்க்கில் உலகின் மிகப்பெரும் டிஜிட்டல் விளம்பரப்பலகை,

உலகின் மிகப்பெரும் டிஜிட்டல் விளம்பரப்பலகை, நியுயார்க்கில் தொடங்கியது

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பரப் பலகை நியுயார்க் நகரில், ஏற்கனவே பல பெரிய ஒளிரும் விளம்பரப் பலகைகளுக்குப் பெயர் பெற்ற, டைம்ஸ் சதுக்கத்தில் இயங்கத் தொடங்கியிருக்கிறது.
ஒரு எட்டுமாடிக் கட்டிடம் அளவுக்கு உயரமான இந்த பலகை , கால்பந்து விளையாட்டுக் களம் போன்ற அளவு பரப்பளவுள்ளது.
அதி-துல்லிய திரையுடன் கூடிய இந்த டிஜிட்டல் விளம்பரப் பலகை மூலம் முதன் முதலாக மலை, பறவை , அடுக்குமாடிக் கட்டிடங்கள் போன்றவைகளைக் காட்டும் ஒரு டிஜிட்டல் படம் ஒன்று திரையிடப்பட்டது.
இந்தப் படக்காட்சிகளுடன் பின்னணி இசையும் சேர்ந்து ஒலிப்பதை நியுயார்க் நகரவாசிகள் கண்டு களித்தனர்.
அடுத்த வாரத்திலிருந்து இந்த விளம்பரப் பலகையில் விளம்பரங்கள் வெளிவரத்தொடங்கும்.
கூகிள் நிறுவனம் இந்த மாபெரும் டிஜிட்டல் பலகையை முதன் முதலாக வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
நான்கு வாரங்களுக்கு இந்த பலகையை வாடகைக்கு எடுக்க விலை என்ன தெரியுமா ? சும்மா 2.5 மிலியன் டாலர்கள்தான் !
சுமார் மூன்று லட்சம் பாதசாரிகள் இந்த விளம்பரப் பலகை இருக்கும் இடத்தை தினசரி கடக்கிறார்கள் என்று கணிக்கப்படுகிறது.
இந்த விளம்பரப் பலகை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதன்முதலாக இயக்கப்பட்டபோது, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதைக் கண்டு ரசித்தனர்.




Leave a Reply

Your email address will not be published.