Search

நூடுல்ஸ் சொல்லும் ரகசியத்தைக் கேளுங்க.

நூடுல்ஸ்… என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது குழந்தைகளின் குதூகலம்தான். அதிலும் துரித நூடுல்ஸ் என்றால் பெரும்பாலான அம்மாக்களுக்கும் மகிழ்ச்சிதான்.

எடுத்தோமா 5 நொடியில் செய்தோமா.. குழந்தையிடம் கொடுத்தால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டுவிடும். வாயிறு நிரம்பிய திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும் என்று நினைப்போம்.

ஆனால் நூடுல்ஸ் அவ்வளவு எளிதான உணவு பொருளும் அல்ல, அதனை நினைத்து மகிழ்ச்சி கொள்ளவும் ஏற்றது அல்ல.

நூடுல்ஸ் சாப்பிடாதீங்கன்னு நிறைய பேர் சொல்றாங்க தாங்க.. ஆனா, எங்க புள்ளைங்க அதத்தானே விரும்பி சாப்பிடுறாங்கன்னு சொல்வது புரிகிறது. ஆனா, அவங்களுக்குப் பிடிக்கும்னு கல்லையோ மண்ணையோ நீங்க சாப்பிடக் கொடுப்பீங்களா.. அப்படியே கல்லையோ மண்ணையோ கொடுத்தால் கூட அது நூடுல்ஸை விட அதிகக் கெடுதியை செய்து விடாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஏன் எனில் நூடுல்ஸை வேண்டவே வேண்டாம் என்று சொல்வதற்கு எங்களிடம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றை சொல்ல நேரமில்லாததால் ஒரு முக்கியமான பத்து காரணங்களை இங்கே சொல்கிறோம்.

இதில் எல்லாமே மிகவும் யோசிக்க வேண்டிய விஷயங்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

முதலில்,

சத்துக்களை உட்கிரகிக்கும் தன்மை

நூடுல்ஸ் சாப்பிடும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உணவில் இருக்கும் சத்துக்களை உட்கிரகிக்கும் ஆற்றல் குறைந்து போய்விடும். இதனால் வேறு எந்த சத்தாண உணவைக் கொடுத்தாலும் அதனால் குழந்தைகளுக்கு எந்த பலனும் இல்லாமல் போய்விடுகிறது.

புற்றுநோய்க்கு வாய்ப்பு

துரித நூடுல்ஸ்களில் சேர்க்கப்படும் ஸ்டைரோபோம் எனப்படும் ரசாயனம் புற்றுநோயை உருவாக்கவல்லது. எனவே, அடிக்கடி துரித நூடுல்ஸ் சாப்பிடுவோருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கருக்கலைப்பு

கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் துரித நூடுல்ஸை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கருக்கலைப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. ஏன் எனில், நூடுல்ஸில் இருக்கும் ரசாயனங்கள் கருவின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது அறிவியல் பூர்வ உண்மையாகும்.

செரிமான மண்டலம் பாதிப்பு

நூடுல்ஸ் விளம்பரங்களில் போடப்படுவதை போல, அதில் எந்த விட்டமின்களும், மினரல்களும் இல்லவே இல்லை. அது வெறும் கார்போஹைட்ரேட் மட்டும்தான். நூடுல்ஸ் என்பது வயிற்றைப் பொருத்தவரை ஒரு ஜங்க் புட். அவ்வளவுதான்.

இந்த ஜங்க் புட் வயிற்றுக்குள் போனதும் செரிமான இயக்கத்தையே சேதப்படுத்திவிடுகிறது. அதனை செரிமானம் செய்ய வயிற்றுக்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இது உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு. இருந்த இடத்திலேயே இருந்தால் இந்த நேரம் இரு மடங்காகும் வாய்ப்புள்ளது.

அதிக சோடியம்

பேக் செய்து விற்கப்படும் நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான சோடியம் கலந்துள்ளது. உடலில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான சோடியம் கலப்பதால் இதய நோய், பக்கவாதம், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதுவே இந்த நோய்களில் ஏதேனும் ஒன்று ஏற்கனவே இருப்பவர்கள் நூடுல்ஸ் சாப்பிட்டால் அவர்களது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகும்.

மோனோசோடியம் க்ளுடாமேட்

நூடுல்ஸின் வாசத்துக்காக அதில் மோனோசோடியம் க்ளுடாமேட் சேர்க்கப்படுகிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டதும் தலைவலி, முகத்தில் வீக்கம், வலி, வயிற்றில் எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அவருக்கு மோனோசோடியம் க்ளுடாமேட் ஒத்துக் கொள்ளாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

உடல் பருமன்

உடல் பருமனுக்கும் நூடுல்சுக்கும் என்னங்க சம்பந்தம் இருக்கு என்று கேட்காதீர்கள். நிறையவே இருக்கு. நூடுல்ஸில் எக்கச்சக்க கொழுப்பு இருக்கிறது. மேலும், நூடுல்ஸில் சோடியம் அதிகமாக சேர்க்கப்படுவதால், அது உடலில் நீர் சக்தி குறையக் காரணமாகிவிடும். இதனால் அதிகப்படியான கொழுப்பு உடம்பில் தங்க வாய்ப்பு ஏற்படுகிறது.

உடல் பருமன் பல வியாதிகளுக்கு தாய் வீடு என்பது பலருக்கும் தெரியும். ஆனால் நூடுஸ்ஸ் உடல் பருமனுக்கே சொந்த வீடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

வயிறு மந்தம்

நூடுல்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு மந்தமாகி அதன் இயல்பு நிலையை இழந்து விடுகிறது. இதனால் பலருக்கும் உணவு செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நூடுல்ஸ் அதன் தளர்த்தியான நிலையை பெற ப்ரோபைலைன் க்ளைகோல் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அழித்துவிடும் ஆற்றல் பெற்றது. நூடுல்ஸ் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் பாகங்களை இந்த ரசாயனம் தாக்கி அதனை சேதப்படுத்திவிடும் ஆபத்தும் உள்ளது.

உடலின் இயக்கத் தன்மை

நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலின் சாதாரண இயக்கத் தன்மையே கெட்டு விடுவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன. அதில் உள்ள ரசாயனங்கள் மனித உடலில் அடிக்கடி சேர்வதால், மனித உடலின் இயக்கம் மாறுபட்டு உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

இவ்வளவையும் நாங்க சொல்லிட்டோம்… நீங்க என்ன செய்யப் போறீங்க?
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *