முக்கியஅறிவித்தல்-குளிர்கால ஒன்றுகூடல்-2012 சம்பந்தமானது..

அன்பான வல்வைமக்களே,
வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானியகிளையால் வருடாவருடம் கோடைவிழாவும் அதனைப்போலவே
குளிர்காலஒன்றுகூடலும் சிறப்பாக நடாத்தப்பட்டுவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.கோடைவிழா 2012 சிறப்பானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடாத்திமுடிக்கப்படுவதற்கு நீங்கள் அனைவரும் அளித்த அற்புதமான ஒத்துழைப்பும் உதவிகளும் நன்றியுடன் என்றென்றும் நினைக்கப்படும்.
அதனைப்போலவே,27.10.2012 அன்று

The Archbishop Lanfranc School

Mitcham Road,Croydon,Surrey,CR9 3AS

எனும் இடத்தில் சிறப்பான முன்னேற்பாடுகளுடன் நடாத்த எண்ணியுள்ளோம்.எனவே சென்றமுறையை போலவே எமது மக்கள் தமது ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கவேண்டும் என்று வேண்டிநிற்கின்றோம்.
நிகழ்வுகள் சம்பந்தமாக,அரங்கஅமைப்புசம்பநதமாக,உணவகம் சம்பந்தமாக,ஒருங்கிணைப்பு சம்பந்தமாக,வரவேற்புசம்பந்தமாக என்று ஏராளமான வேலைத்திட்டங்கள் காத்து கிடக்கின்றன.

அதனைப்போலவே,மிகவும் திறமைச்சித்திகள் அடைந்த வல்வை மாணவமாணவிகளுக்கு சிறப்பு சான்றிதழும்,பரிசுகளும்,வெற்றிக்கிண்ணமும் வழங்க எண்ணியுள்ளோம்.
எனவே,சென்றஆண்டு பரீட்சைகளில் சிறப்புசித்திஅடைந்த மாணவமாணவிகளின் பெற்றோர் தயவுசெய்து உடனடியாக கீழே நாம் கொடுத்துள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெயர்களையும் பரீட்சை சம்பந்தமானதும் பெற்ற சித்திகள் சம்பந்தமானதும் தரவுகளை பதிவுசெய்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.
நிகழ்ச்சிகளை வழங்க எண்ணியுள்ளோரும் தயவுசெய்து 18.10.2012க்கு முன்பாகவே தமது பெயர்களையும் நிகழ்வுசம்பந்தமான விபரங்களையும் பதிவுசெய்ய அழைக்கின்றோம்.
இது நம் அனைவரின் விழா.அனைவரும் இணைந்து வெற்றியுடன் நடாத்துவோம்.
நன்றி
நிர்வாககுழு
வல்வை நலன்புரிச் சங்கம்-பிரித்தானியா

தொடர்புகட்கு:
த.உதயணன் (தலைவர்):07578086782
பா.ஞானச்சந்திரன் (செயலாளர்):07577404084
க.சதானந்தவேல்(நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்):07533135665

Leave a Reply

Your email address will not be published.