யாழ்ப்பாணம் நல்லூர்பகுதியில் வைத்து சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் வாகனத்தின் மீது கழிவு எண்ணை வீசித்தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
யாழ். நல்லூர் ஆலயத்தின் முன் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தமது பஸ் மீது கழிவு எண்ணெய்த் தாக்குதல் நடாத்தப்பட்டதாக சுதந்திரமான பெண்கள் அமைப்பின் தலைவி திமுது ஆடிகல தெரிவித்துள்ளார்.
யாழ். நல்லூரில் வாகனத்தின் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் அகியவற்றைக் கலந்தே தமது வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தம்மைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இந்தத் தாக்குதலை நடாத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து யாழ் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மெற்கொண்டதுடன் இவர்களையும் பாதுகாப்பாக திரும்பி செல்லும்படி யும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இவர்கள் நிகழ்வொன்றையும் நடாத்த எற்பாடு செய்த போதும் அதிலும் குழப்பத்தினையும் ஏற்படுத்தியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்கள் 30ற்கும் மேற்பட்டோர் பஸ்சில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.