வல்வை செய்திகள்

ஏ.ரி.எம் அட்டை மோசடி வல்வெட்டித்துறை,பொலிகண்டியைச் சேர்ந்தவர்களோடு ஒருவர் கைது!.14 வரை விளக்கமறியல்…..

இலங்கை முழுவதிலுமுள்ள வங்கிகளில் போலி ஏ.ரி.எம் அட்டைகளைப்பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக வல்வெட்டித்துறை பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.பொலிகண்டிப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 69 ஏ.ரி.எம் அட்டைகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்தவரும் மற்றவர் இருவரும் ஹற்றனைச்சேர்ந்தவரோடு ஒருவர் பொலிகண்டி மேற்கு ஊறணியைச்சேர்ந்தவருமாக மூவரே மோசடியிலிடுபட்டவர்களாவர்.

அகில இலங்கையிலுள்ள வங்கிகள் பலவற்றின் ஏ.ரி.எம் அட்டைகளை தயாரித்து இவர்கள் நீண்டகாலமாகமோசடியிலிடுபட்டுவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறான கும்பல் ஒன்று வடமராட்சி பொலிகண்டிப்பகுதியில் இரவு வேளைகளில் நடமாடித்திரிவதாக தமக்கு ஏற்கனவே தகவல் கிடைத்ததாக கூறும் பொலிஸார் குறித்த கும்பல் முற்சக்கரவண்டியில் பொலிகண்டி பகுதியில் பயணிப்பதாக தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே இவர்கள் கடந்த 2014.12.03ம் திகதி புதன்கிழமை இரவு பொலிகண்டிச்சந்தியில் வீதிக்கடமையிலீடுபட்டுக்கொண்டிருந்த பொலீஸார் குறித்த கும்பலின் முற்சக்கர வண்டியை திடீர் சோதனை செய்து பார்த்தவேளையிலே அதில் பயணித்த மூவரிடமிருந்தும் சுமார் 69 ஏ.ரி.எம் அட்டைகளை கைப்பற்றியுள்ளதுடன் உடனடியாக் முற்சக்கரவண்டியுடன் மூவரைக்கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஏ.ரி.எம் அட்டைகளுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கடந்த 2014.12.04ம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆயர் படுத்தியுள்ளனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 14ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். இந்தக்கும்பலின் வலைப்பின்னல் தொடர்பில் விசாரணைகள் முடுக்கி வைத்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் கூறுகின்றனர்.

கா.கணேசா.விஜியந்தன்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *