நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகம் செல்லும் நவீன ரக விமானம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு வெறும் நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த விமான இன்னும் மூன்று ஆண்டுகளில் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ‘ஸ்கைலான்’ என்ற புதிய விமான ஒன்றை தயாரித்துள்ளது. இந்த விமானம் ஒலியை விட 5 மடங்கு அதிகமான வேகத்தில் செல்லும். இந்த விமானம் கிளம்பும்போது விமானத்தின் வேகத்திலும், புவியீர்ப்பு சக்தியின் எல்லை தாண்டியதும் ராக்கெட் வேகத்திலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் அளவிலான வெப்பத்தை, ஒரு வினாடியின் நூறில் ஒரு மடங்கு நேரத்திற்குள் 150 டிகிரி வெப்ப நிலையாக குளிர்விக்கக் கூடிய தொழில்நுட்பம் உள்ளது. இதன் உதவியுடன் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஜெட் எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.

வர்த்தகரீதியாக இந்த விமானம் இன்னும் மூன்று ஆண்டுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. முதலில் சிறிய வகை விமானமாகவும் பின்னர் பெரிய வகை விமானமாகவும் இது தயாரிக்கப்படவிருக்கின்றது..

Leave a Reply

Your email address will not be published.