ஆதிசக்தி விளையாட்டு கழகத்தினரால் நடத்தப்பட்டு வரும் 09நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய(10-10-2012) இரண்டாவது சுற்று ஆட்டத்தில் வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து யாழ் சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகம் மோதியது. இவ் ஆட்டத்தில் 2க்கு 1என்ற கோல் கணக்கில் வல்வை விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது .வல்வை விளையாட்டு கழகத்தின் அணித்தலைவர் தாஸ் அவர்கள் 1கோல்களையும்,ரசிகரன் அவர்கள் 1கோல்களையும் அடித்து வல்வை விளையாட்டு கழகத்தின் வெற்றிக்கு வழி சமைத்தனர்.ஏராளமான வல்வை மக்கள் இவ் விளையாட்டு நிகழ்வினை பார்த்து ஆர்வத்தை தெரிவித்தனர்.