பிரித்தானியாவில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுமார் 7,000 கட்டிடங்கள் அழியும் அபாய நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பிரித்தானிய கடற்கரை பகுதிகளில் வீடுகள் உட்பட சுமார் 7,000 கட்டிடங்கள் வரை கடல் அரிப்பினால் அழிந்து விடும் ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆய்வில் கூறியதாவது, அடுத்த 20 ஆண்டுகளில் 800 கட்டிடங்களை கடல் நீர் முழ்கடித்து விடும்.
இதனால் இந்த நூற்றாண்டில் சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துக்கள் கடலின் ராட்சத அலைகளால் இழுத்து செல்லப்பட்டு பிரித்தானியாவுக்கு இழப்பை தரும்.
குறிப்பாக கார்ன்வால் (Cornwall)கடல்பகுதி அடுத்த 20 ஆண்டுகளில் 76 வீடுகளை கடல் நீருக்கு இரையாக்கும் என்றும் கிரேட் யார்மவுத் (Great yarmouth) சுமார் 293 வீடுகளையும், சவுதாம்ப்டன் (Southampton)சுமார் 280 வீடுகளையும் இழக்க நேரிடும்.
மேலும் பிரித்தானியாவின் மற்ற கடற்கரைப்பகுதிகளில் சுமார் 295 வீடுகள் அழியலாம் அல்லது வானிலையின் விளைவாக 430 கட்டிடங்கள்









