கனடா ரொரன்ரோவில் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள “ஈகுருவி பிஸ்தா எக்சலென்ற நைற் விருது” வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக முன்னாள் வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளரும்.பிரபல எழுத்தாளருமான வல்வை.ந.அனந்தராஜ் கலந்து கொண்டு. “ஈழத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோரின் வகிபாகம்” சிறப்புரை ஆற்றவுள்hர். கனடா,ரொரன்ரோ கொன்வன்சன்; மண்டபத்தில் நடைபெறும் இவ்விழாவில்,ரொரன்ரோவின் தமிழ் வர்த்தக சமுகத்தைச் சேர்ந்த 500 தொழில் அதிபர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் இந்த நிகழ்வில் வல்வை ந.அனந்தராஜ் அவர்களும், சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையையும் ஆற்றுவதற்காக, தமிழகத்தின் பேராசிரியர் முனைவர் ஜயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன் அவர்கள்; கனடா சென்றுள்ளார். வருடந்தம் நடைபெறும் இவ்விழாவில் மிகச் சிறந்த தொழில் அதிபர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Home வல்வை செய்திகள் கனடாவில் தொழில் முயற்சிக்கான வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு : பிரதம விருந்தினராக வல்வை.ந.அனந்தராஜ் கலந்து கொள்கின்றார்

கனடாவில் தொழில் முயற்சிக்கான வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு : பிரதம விருந்தினராக வல்வை.ந.அனந்தராஜ் கலந்து கொள்கின்றார்
Jan 09, 20150
Previous Postஜேர்மன் வாழ் வல்வை மக்களின் குளிர் கால ஒன்றுகூடல் 10.01.2015
Next Postவல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் வருடாந்த மாவட்ட ரீதியிலான மாபெரும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி ் நாளை (10/01/2015) காலை 8.30 மணி அளவில் றெயின்போ கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது