சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சாத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை யானை மீது வைத்து கொண்டு வரப்படும் பூக்கூடை . திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கவும், உலக நன்மைக்காகவும் மாரியம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் (மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை) பூச்சொரிதல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை […]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 7–ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் 7–ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை […]

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா

திருச்செந்தூர், பிப்.17 – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருக பெருமானின் 2​ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் ஊர்வலமாக ஒன்பது சந்திகளிலும் […]

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் மாசித்திருவிழா சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றன. இந்த ஆண்டு திருக்கோயிலில் மாசித்திருவிழா சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30  மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,  3 உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை […]

இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு?

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்களை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈ்டுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப் போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டு விட்டன. தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டு விட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஆதாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அந்த ஆவணம் இப்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை […]

பழனி – திருச்செந்தூர் கோவில்களில் குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர். ஜன. – 28 –  தைப்பூசத்திற்காக திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவில் நடை இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனையைத் தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில், தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது. சுவாமி, அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் […]