நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

நான்கே மணி நேரத்தில் உலகை சுற்றலாம். ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் விமானம் தயார்

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிக வேகம் செல்லும் நவீன ரக விமானம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு வெறும் நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த விமான இன்னும் மூன்று ஆண்டுகளில் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ‘ஸ்கைலான்’ என்ற புதிய விமான ஒன்றை தயாரித்துள்ளது. இந்த விமானம் ஒலியை விட 5 மடங்கு […]

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்

ரிமோட் கன்ரோலர்களையும் தாண்டி கை அசைவுகளின் மூலம் தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Onecue எனும் இச்சாதனம் மூலம் தொலைக்காட்சிகள் தவிர Cable Box DVR, Apple TV மற்றும் WiFi மூலம் செயற்படக்கூடிய மின்குமிழ்கள் என்பவற்றினையும் கட்டுப்படுத்த முடியும். இதனை 2015ம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வால்நட்சத்திரத்தில் இறங்கியது பிலே கலன்

சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான். சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின்மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை […]

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்

நனோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாதனத்தை Utah பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். விரிவுரையாளர் Ling Zang தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் Carbon Nanotubes என அழைக்கப்படுகின்றது. நுணுக்குக்காட்டி, இரண்டு மின் வாய்கள், என்பவற்றினையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனமானது குண்டுகளை அடையாளம் கண்டதும் உண்டாகும் மின்னியல் மாற்றத்தினை பயன்படுத்துவோருக்கு அறிவிக்கின்றது. இச்சாதனம் எதிர்வரும் காலங்களில் விமான நிலையங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு முறைமைகளில் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்

சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது அப்பதிப்பினை 24 கரட் தங்கத்தினால் ஆன கவருடன் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையானது 1,664.17 பவுண்ட்ஸ்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.7 அங்குல அளவு, 1280 x 820 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் Eight Core Samsung Exynos Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவும், 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை […]

வருகிறது மைக்ரோசொப்டின் முதலாவது லூமிய கைப்பேசி!

வருகிறது மைக்ரோசொப்டின் முதலாவது லூமிய கைப்பேசி!

வருகிறது மைக்ரோசொப்டின் முதலாவது லூமிய கைப்பேசி! மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் முதன் முறையாக உருவாக்கப்பட்ட லூமிய ஸ்மார்ட் கைப்பேசி நாளைய தினம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியாகியுள்ளது. இக்கைப்பேசியானது முற்றுமுழுதாக Microsoft Lumia பிராண்டின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வியாபாரக் குறியீட்டு இலக்கம் RM-1090 என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் Nokia Lumia 530 ஸ்மார்ட் கைப்பேசிக்கு பிரதியீடாக இது அறிமுகம் செய்யப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இக்கைப்பேசியின் சிறப்பம்சங்கள் உட்பட ஏனைய தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு பாதுகாப்பு தரும் வயர்லெஸ் கமெரா!

வீட்டுக்கு பாதுகாப்பு தரும் வயர்லெஸ் கமெரா!

Netgear எனும் நிறுவனம் வயர்லெஸ் முறையில் இயங்கக்கூடியதும் வீட்டினை கண்காணிக்கக்கூடியதுமான புதிய ஸ்மார்ட் கமெராவினை அறிமுகம் செய்துள்ளது. Netgear Arlo எனும் இக்கமெராவானது HD தொழில்நுட்பத்தில் வீடியோ பதிவு செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் 130 டிகிரி கோணத்தில் படம் பிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் இரவு நேரங்களிலும் துல்லியமாக படம் பிடிக்கக்கூடிய வகையிலும், நீர் உட்புகாத வகையில் இக்கமெரா உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் iOS மற்றும் Android சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் இலவசமாகவும் கிடைக்கின்றது.

ஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்!

ஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்!

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்களுடன் பல பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன. இவற்றின் ஒரு அம்சமாக ஒளி ஊடுபுகவிடும் கதவுகளைக் கொண்ட கார்களும் விரைவில் அறிமுகமாகவுள்ளன. இதற்கான ஆராய்ச்சியில் Keio பல்கலைக்கழகத்தில் Media Design துறையில் கற்றுவரும் Susumu Tachi மற்றும் Masahiko Inami ஆகிய மாணவர்கள் வெற்றி கண்டுள்ளனர். இத்தொழில்நுட்பம் தொடர்பாக வீடியோ டெமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் அதிவேக Broadband இணைய சேவை

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் அதிவேக Broadband இணைய சேவை

Virgin Media வலையமைப்பானது 152Mb வேகம் கொண்ட Broadband இணைய சேவையை பிரித்தானியாவில் அறிமுகம் செய்கின்றது. இதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரு நிமிட நேரத்தில் தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2007ம் ஆண்டில் காணப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விடவும் தற்போது 55 சதவீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அந்நிறுவனம் ஆரம்பத்தில் 30Mb வேக இணைய இணைப்பைக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் தமது இணைப்பு வேகத்தினை 50Mb, 60Mb, […]

VaiSWAவும், VEDA கல்வி நிறுவனமும் சேர்ந்து திரு தா.மாணிக்கவாசகர் நிதியுதவியுடன் (14,15/02/2014) நடாத்தப்பட்ட துணிகள் அச்சிடும் தொழிநுட்ப பயிற்சிப்பட்டறை

VaiSWAவும், VEDA கல்வி நிறுவனமும் சேர்ந்து திரு  தா.மாணிக்கவாசகர் நிதியுதவியுடன் (14,15/02/2014) நடாத்தப்பட்ட துணிகள் அச்சிடும் தொழிநுட்ப பயிற்சிப்பட்டறை

                   

இன்டர்நெட்டில் உஷார் தேவை…!

இன்டர்நெட்டில் உஷார் தேவை…!

இன்று நாம் இணையத்தில் இணைந்து, தேவையான தளங்களைச் சுற்றி வந்தாலே போதும், நம்மை பற்றிய அனைத்து பெர்சனல் தகவல்களும் யாருக்காவது சென்று விடும் வகையில் சேர்க்கப்படுகின்றன. எப்படி, எந்த வழிகளில் இவை தேடி எடுக்கப்படுகின்றன என்பது நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால், இணையம் இயங்கும் வழிகளை ஆய்வு செய்தவர்கள், இந்த வழிகளைக் கண்டறிந்துள்ளனர். இன்றைக்கு கிராமங்களில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் எப்படி அவர்கள் கண்ணில் துணியைப் போட்டு, பின் நம்மைத் துரத்தி விளையாடுகிறார்களோ, அதே போல, நாம் […]

செயற்கை மதிநுட்ப மென்பொருள் மூலம் ஓர் இரவில் மாபெரும் கோடீஸ்வரர் .

செயற்கை மதிநுட்ப மென்பொருள் மூலம் ஓர் இரவில் மாபெரும் கோடீஸ்வரர் .

மனிதர்களைப் போன்று கணினிகள் சிந்திப்பதற்கு வழிவகை செய்யக்கூடிய செயற்கை மதிநுட்ப மென்பொருளை விருத்தி செய்வதற்காக தன்னால் உருவாக்கப்பட்ட கம்பனியை கூகுள் நிறுவனத்திற்கு விற்றதன் மூலம் பிரித்தானியாவைச் சேர்ந்த கணினி மேதையொருவர் ஒரு நாளில் மாபெரும் கோடீஸ்வரராகியுள்ளார். நரம்பியல் விஞ்ஞானியான டெமிஸ் ஹஸ்ஸபிஸ், (37 வயது) இரு வருடங்களுக்கு முன் கணினிகள் மனிதர்களைப் போன்று சிந்திப்பதற்கு உதவும் முகமாக டீப்மைன்ட் டெக்னோலொஜிஸ் நிறுவனத்தை பிறிதொருவருடன் இணைந்து ஸ்தாபித்தார். லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் அவரது கம்பனி வர்த்தக ரீதியாக […]

14 வயது சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் ‘i-Safe’ அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார்

14 வயதான சென்னை சிறுவன் ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கியுள்ளார். அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது. உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும், ஒரு புதிய செயல்பாட்டை […]

பயனர்களை கவரும் புதிய வடிவமைப்பில் வெளிவருகின்றது Samsung Galaxy Round (வீடியோ இணைப்பு)

பயனர்களை கவரும் புதிய வடிவமைப்பில் வெளிவருகின்றது Samsung Galaxy Round (வீடியோ இணைப்பு)

வேறுபட்ட தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவந்த Samsung நிறுவனம் தற்போது வடிவத்திலும் புதுமையை புகுத்தியுள்ளது. இதற்கிணங்க Samsung Galaxy Round எனும் வளைந்த தோற்றம் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை உருவாக்கியுள்ளது. 5.7 அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியில் 2.3GHz வேகம் கொண்ட Processor மற்றும் 3GB RAM ஆகியனவும் காணப்படுகின்றது. மேலும் கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை […]

1 2 3 11