அன்புடன் வல்வைக்கு…… வல்வையரின் மாபெரும் பட்டப்போட்டி பற்றிய ஒரு கவிதை….

ஈழத்தின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் மு.ஆ.சுமன் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதோடு மட்டுமல்லாது நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்தி வரும் வல்வை சுமன் அவர்கள், பிச்சை, மனம், எதிர்வினை உள்ளிட்ட ஐந்திற்கும் அதிகமான குறும்படங்களில் நடித்துள்ளார். ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ உலகளாவிய பெருநூலில் ஒருவராக இடம்பெறும் இவர், வாழ்வுதனை தேடி(2008) மரணித்த மனிதம்(2009) முகாரி பாடும் முகங்கள்(2014) ஆகிய கவிநூல்களை வெளியீடு செய்திருக்கிறார். ‘கலையோடு வாழ்வோம்’ எனும் இசை இறுவட்டினை வெளியீடு செய்த இவர், […]
என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார் எறிந்தார்!!! கருவாகச் சின்னத் தமிழ் ஒன்றைச் சுமந்ததினாலா? இன்று தெருவோரம் நீ புரண்டு உருமாறிப் போனாய்… கேடு கெட்ட இந்த மாந்தரிடம் என் சேயை மட்டும் காட்டு என்று வாய் வலிக்கப் பேசியே உன் கால் கடுக்க நின்றாயோ… உன் பிள்ளை இருப்பானா? மாட்டானா? என்று நெருப்போடு நீ […]
ஏங்கி ஏங்கியே வாழும் எங்களின் வாழ்வின் வலியை ஒற்றை ஆளாய் நின்று ஓங்கி ஒலித்த எங்கள் மகளே! குருதியில் நனையும் எங்களின் அவல வாழ்வை உருகி உருகிப் பாடிய ஈழத்துக் குயிலே! தங்கம் வேண்டாம் என்று இங்கு ஏங்கும் குழந்தைகளுக்குத் தாயான இன்னுமொரு தெரசா நீ! அன்பு கொண்டு அரவணைத்து ஆதரவாய் வாழ்வது தான் வாழ்க்கை என்று வழி காட்டி விட்டாய். ஈழத்தவர் இப்படித்தான் என்று […]
வல்வெட்டித்துறையின் வளமானவன் முல்லை திவ்வியனின் சஞ்சிகை கவிதை தொகுப்புக்களும், வரலாற்று விளையாட்டு சாதனைகளையும் படங்களில் காணலாம்
நூலகமே நானும் நீயும் எஞ்சிய வகையில் சொந்தம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது எமது முன்னோரின் நூல்களின் வெம்மை அறிவுச் சுடரேற்றிய நூல்கள் அடுக்கிய தீக்குச்சிகளாய் வெம்மை பரவாமல் நீரூற்றியிருக்கலாம் நெருப்புத் தூவியதாய் நினைவுகள் தழல் வீரம் செத்துப்போனது நூலெரிந்த சூட்டில் நீயெரிக்க முன்னரே நாமே பற்றி எரிந்தோம் உயிர் கொடுத்துக் காத்த எம் மானத்தின் சின்னமாய் எஞ்சிய நூலகக் கட்டிடம் எரிந்த […]
தமிழீழம் வடக்கு, கிழக்கு மற்றும் உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழர்களின் உயிர் மூச்சான பூமி தமிழீழம் ! தமிழர்களின் தலைமகனானாலும் எந்தவித ஆசாபாசங்கள் இல்லாது போராடிய பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தில் கட்டி வளர்ந்த அழகிய பூங்கா தமிழீழம் ! இந்தப் பூங்காவில் விலை மதிக்க முடியாத பல தியாகங்களை புரிந்த புனிதர்கள் உறங்குகின்ற புண்ணிய பூமி தமிழீழம் ! மூன்று தசாப்த காலமா பல தியாகங்கள் புரிந்து […]
நெடிய நாட்களின் பின்பு நிசப்தங்களை விழுங்கி பருத்திருந்தது இரவு எண்ணற்ற மிலேச்சத்தனங்களால் பார்வதியொருத்தியின் கருவில் மீளவும் சூல் கொள்ளும் புரட்சி தாய் நிலமே வெடித்து புல்லரித்திருக்கும் இவை போல எத்தனையென்றாலும் தந்து கொள்ளத் தயார் ஜென்ம தேசத்திற்காய் எனவுரைத்த பாலகனின் உயிர் பூத்த இறுதி நிமிடக் கல்லறைப் பார்வையால் வலிந்து மூடிய உலக விழிகளுக்கு முன்பு பிஸ்கட்கள் கொரித்திடும் சத்தத்தில் வல்லூறுகள் குருவிக் […]
மழை காட்டும் ஒற்றுமை தமிழா கடல் கொண்ட நீரை கவர வந்த கள்வன் கரு கொண்ட மேகம் பெரு மேகம் தங்கள் பேதைமை மறந்து இணைந்து பெய்வது தான் பெருமழை மேகத்துடன் மேகம் இணைந்து மேலான ஒற்றுமை கொண்டதால் மேதினி பெறுவது தான் மழை சிறு சிறு துளிகள் எல்லாம் சிதறாமல் சேர்வது தான் சினம் கொண்ட பெரு வெள்ளம் வரும் […]
தன்னிச்சையாய் தைரியமாய் களமிறங்கிய மாணவர்களை நள்ளிரவில் கைதாக்கியிருக்கிறது… ஆதரவாளர்களையும்.. அஞ்சி ஒடுவர் ,ஒதுங்குவர் என நினைத்ததோ அரசு? தமிழ் ஈழ ஆதரவு எல்லாம் அரசியல் நாடகம் என கண்டுனர்ந்து ஒண்றினைந்தே புரப்பட்டதே இப் புரட்சித் தீ ீ சட்டமன்ற ஏடுகள் எடுத்துரைக்கலாம் பொம்மைகளும் தலையாட்டலாம் அரசு மக்களுக்கானது அல்ல என்பதனை எடுத்துரைக்கிறது உங்களின் அடுத்தடுத்த ஒடுக்குமுறைகள்… சுதா கந்தசாமி
புரட்சி கவிதை மரணித்து போயுள்ள மனிதாபிமானத்தை மீண்டும் மீட்டெடுக்க மனிதன் மனிதனாக மாறவேண்டும்! இல்லையென்ற வறுமை மொழி இவ்வுலகில் இருந்து ஒழிய இருப்பவன் மேலதிகத்தை இழக்க முன்வரவேண்டும்!! உரிமைகள் மறுக்கப்பட்டு ஊமைகளாய் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடக்குமுறையிலிருந்து விடிவு வேண்டும்!!! பணத்தை அங்கீகரித்து குணத்தை நிராகரித்து மமதையில் வாழும் மனிதன் அன்பை நேசிக்க வேண்டும்!!!! உதவியின்றி தவிப்போருக்கு உதவுவதற்கு முன்வருவோர் இவ்வுலகில் நீடூழி வாழ வேண்டும்!!!!! கவிஞர்:ரா
ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை மீட்பர்களற்ற வதைமுகாம்கள் மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பசி மயக்கத்தில் கேட்பாரற்று உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில் சருகாகின தனிமைக் கூடுகள். அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள் உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கின்றன. கூடி அழ ஆளின்றி மானிட மரணங்கள் மலினப்படுகின்றன. தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது. […]
அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது… அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது… செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது… […]
தமிழ் காத்து வாழ்வோம் தமிழ் அழகு மொழி – அறிவு சிறந்தோர் உதித்த மொழி தமிழுக்கு அழகு ழகரம் – அந்த தமிழ் இன்று இழந்தது பல நாடு இழந்தோம் நகரிழந்தோம் தன்னிகரிலா உறவுகளை இழந்தோம் தங்கி வந்த நாட்டில் தமிழில் எங்கள் பேரிழந்தோம் இத்தனையிலும் பெருமையும் கொண்டோம் இது எங்கள் சிறுமைதானே தமிழன் நாம் பலர் பேசுவது தங்கிலிஸ் பேசுவது தங்கிலிஸனாலும் […]
உண்மைக்கு மதிப்பிருக்கு….! ஒரு நாள் பழகினாலும், உண்மையான பாசமுடன் பழகினால் அந்த முகம் இறுதி காலம்வரை நெஞ்சில் நிலைத்திருக்கும்…. வானத்து நிலா, தரைக்கு வராது. வானத்து மின்னல், நிலைத்து நின்று ஒளி கொடுக்காது, வானவில்லோ நேராய் தெரியாது, ஆனால் இப்படி நிலையில்லாததை நடக்க முடியாததையெல்லாம் ஏன் பெண்களுடன் ஒப்பிடுகிறார்கள் இதையெல்லாம் நம்பி சந்தோசப்பட பெண்கள் முட்டாள்களா என்ன?
தொலைந்து போன நிமிடங்களில்…! நான் தொலைந்து போன நிமிடங்களில் தேடிப்பார்க்கிறேன்…! என்னை தொலைய வைத்த வலிகளின் நினைவுகளை…! கண்ணுக்கெட்டாத தூரமாகிபோனது நினைவுகள் அனைத்தும்…! மனதினில் ஒரு அமைதி மௌனத்தின் சங்கமம்….! பசி எடுக்கவில்லை உறக்கம் பிறக்கவில்லை…! மனமெங்கும் ஒரு நிசப்தம் என்னவென்று விவரிப்பேன்…! ஆர்ப்பரிப்பில்லாமல் அமைதியாக கடலன்னை என் பாதங்களை தழுவினாள்…! இறைச்சல் இல்லாமல் தென்றலும் என்னை வருடியது…! பூக்களின் வாசமும் என்னை தேடி வந்து […]