தமிழ் மாணவர்கள் விஞ்ஞானக் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்”
– கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
“மலையக மாணவர்களின் கல்வி அபிவிருத்தியில் பெற்றோர்கள் எடுக்கும் அக்கறை மிகவும்முக்கியமானது.ஒரு சமுகத்தின் கல்வி நிலையில் வளர்ச்சி ஏற்படும் பொழுதே அந்தச் சமுகம் உன்னதமான ஒரு சமுகமாகக் கருதப்படும்.இன்று க.பொ.த.சாதாரண தரத்தில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்ற பல மாணவர்கள் உயர்தர வகுப்புகளில் கலைப் பிரிவைத் தெரிவு செய்து வருவதால் அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் இல்லாது போவதால் பல்கலைக்கழகக் கல்வியை முடித்த பின்னரும் கூட வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் உள்ளனர்.ஆனால் தகுதியான மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவைத் தெரிவு செய்தால் அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.தற்போது வடக்கு கிழக்கு மாகாணத்துடன் ஒப்பிடும் பொழுது, மலையகத்தின் கல்வி நிலை பின்தள்ளியிருந்த நிலை மாறி இன்று மலையக மாணவர்களிடையேயும் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது.”
ஆறுதல் இலங்கை நிறுவனமும்,தொண்டைமானாறு வெளிக்களநிலையமும் இணைந்து அட்டன் மற்றும் நுவரெலியா, கல்வி வலயங்களில் இவ்வருடம் க.பொத. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட பயிற்சிச் செயலமர்வு தலவாக்கொல்லை மகா வி;ததியாலயத்திலும் அட்டன் கைலன்ஸ் மத்திய கல்லூரியிலும் நடைபெற்ற பொழுது வருகை தந்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸணன் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.
இச்செயலமர்வை ஒழுங்கு செய்த ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் அந்தோனி மத்தியு தலைமையில் இடம் பெற்ற செயலமர்வில் வெளிக்கள நிலையத்தின் உப தலைவரும்இஆறுதல் நிறுவனத்தின் ஆலோசகருமான ந.அனந்தராஜ்இவெளிக்கள நிலையத்தின் பொருளாளர் நா.உலகநாதன்இமற்றும் ஆறுதல் நிறுவனத்தைச் சேர்ந்த பரமநாதன் ரவிராஜ் ரமேஸ் கைலன்ஸ் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.விஜயசிங் ஆகியோருடன் வளவாளர்களாக யாழ் மாவட்டத்தின் முன்னணி ஆசிரியர்களான இ.குகானந்தன், சி.சிவராம் செல்வி.ந.கலா, எம்.ஏ.ரூபநாதன். ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி செயலமர்வை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி செயலமர்வில் கலந்து சிறப்புரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் மலையகத்தில் கல்வி அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான போதிய ஆசிரிய வளம் இல்லாத நிலையில்,வடமாகாணத்தில் இருந்து நூறு ஆசிரியர்களை மலையகத்திற்கு அனுப்பி வைப்பதாக வடமாகாண கல்விச் செயலாளர் ரவீந்திரன் வாக்குறுதி அளித்துள்ளதால் வெகு விரைவில் மலையகத்தில் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மலையகத்தில் 5 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தபோதும், 0.2 வீதமான மாணவர்களே மலையகத்தில் இருந்து பல்கலைக் கழகத்திற்கான அனுமதியைப் பெற்று வருகின்றனர்.இந்த நிலையை மாற்றி முதல் கட்டமாக ஆகக் குறைந்தது 2 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் நிலைக்கு உயரவேண்டும். வடக்குக்கும் மலையகத்திற்கும் கல்விப் பாலத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆறுதல் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கும், தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தினருக்கும் எனது பாராட்டுக் களைத் தெரிவித்து அவர்களது சேவை மலையகத்தில் மேலும் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் தெரிவித்தார்.
இச்செயலமர்வின் நோக்கம் பற்றி ந.அனந்தராஜ் குறிப்பிடும் பொழுது “ கடந்த காலத்தில் வடக்கில் இடம் பெற்ற யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைப் பெறுபேற்றுப் பகுப்பாய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இது போன்ற கருத்தரங்குகளை தற்பொழுது யாழ்ப்பாணத்தில் நடததமுடியாத நிலைக்கு அங்கே மலிந்து காணப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கம் தடையாக உள்ளது.இந்த நிலையில் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் கல்வி,பொருளாதார ரீதியாகப் பலம் பெற்றவர்களாக வாழ வேண்டுமானால்,மலையகம் பலமுள்ள ஒரு சக்தியாக மாறவேண்டும். இதற்கு மலையகக் கல்வி நிலையை ஒவ்வொருவரும் உயர்த்துவதற்காக உழைக்க முன்வரவேண்டும்.அந்த வகையிலேயே வடக்குகிழக்கு மாகாண கல்விச் செயலாளராக இருந்த சுந்தரம் டிவகலாலாவின் வழிகாட்டலில் இயங்கும் ஆறுதல் நிறுவனமும், கடந்த45 வருடங்களுக்கு மேலாக விஞ்ஞானக் கல்வியை வளர்ப்பதில் முன்னின்று செயற்படும் தொண்டைமானாறு வெளிக்கள நிலையமும் இணைந்து மலையகக் கல்வி மேம்பாட்டிற்காக செயலாற்ற முன்வந்தமையானது நல்ல ஒரு எதிர்காலத்தை நோக்கி எமது இனம் முன்னேறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.அதேவேளை இந்தப் பிரதேச மாணவர்களின் நல்ல பண்புகளும்,ஒழுக்க விழுமியங்களும் சிறப்பாக உள்ளதானது மேலும் மேலும் இந்தப் பிள்ளைகளுக்கான சேவையை வழங்க வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. இதனை மேலும் முன்னெடுப்பதற்கு ஆறுதல் நிறுவனத்தின் செயற்பாடுகளை நாடளாவிய ரீதியில் செயற் படுத்துவதற்கு கல்வி அமைச்சர் உதவி செய்யவேண்டும்” என்றும் தெரிவித்தார்.
இரு நாட்களாக நடைபெற்ற விசேட செயலமர்வில் அட்டன் கைலன்ஸ் மத்திய கல்லூரி,சென் ஜோன்ஸ் பொஸ்கோ கல்லூரி,நாவலப்பிட்டி ஸ்ரீ கதிரேசன் மத்திய கல்லூரி, சென் ஜோசப் கல்லூரி, ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 138 மாணவர்கள் அட்டன் கைலன்ஸ் கல்லூரியிலும் தலவாக் கொல்லை தமிழ் மகாவித்தியாலயம் கொட்டகல தமிழ் மகாவித்தியாலயம் கொட்டகல கேம்பிறிட்ஜ் கல்லூரி,புனித திருத்துவ விஞ்ஞானக் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 69 மாணவர்கள் தலவாக் கொல்லை தமிழ் மகாவித்தியாலயத்திலும் கலந்து கொண்டனர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...















