Saturday, August 29, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home கவிதைகள்

எரிந்த யாழ் நூலகம் – ஒரு கவிதை – எரிந்த தீக்குச்சி – ‘ரிதம்’

by admin
02/06/2013
in கவிதைகள்
0
எரிந்த யாழ் நூலகம் – ஒரு கவிதை – எரிந்த தீக்குச்சி – ‘ரிதம்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

 

 

 

 

 

 

 

நூலகமே

நானும் நீயும் எஞ்சிய வகையில் சொந்தம்

 

அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது

எமது முன்னோரின் நூல்களின் வெம்மை

அறிவுச் சுடரேற்றிய நூல்கள்

அடுக்கிய தீக்குச்சிகளாய்

 

வெம்மை பரவாமல் நீரூற்றியிருக்கலாம்

நெருப்புத் தூவியதாய் நினைவுகள்

தழல் வீரம் செத்துப்போனது நூலெரிந்த சூட்டில்

 

நீயெரிக்க முன்னரே

நாமே பற்றி எரிந்தோம்

உயிர் கொடுத்துக் காத்த எம் மானத்தின் சின்னமாய்

எஞ்சிய நூலகக் கட்டிடம்

எரிந்த தீக்குச்சிகளுக்கிடையே

மருந்திற்காகவேனும்

எரியாத தீக்குச்சி தேடும் நூலகத் தீப்பொறி

 

வருவோர்;; போவோர்; வல்லோர்; பெரியோர்;

அனைவரையும் அரவணைக்கும்

தாயிழந்த நூற்குழந்தை- பாவம்.

வாசி வாசி என வரலாறு கொடுக்கும்

தலைப்பிழந்த நூல்கள்.

 

நாமோ இன்னமும்

பருவஇதழ்ப் பக்கங்களில்

‘காப்பெற்’ நடுச்சந்திகளில்

உயர் அடுக்கு விடுதிகளில்

க(கி)ழிந்து போன காலங்களைப் பேசியபடி

எஞ்சியிருக்கும் வெம்மையையும்

‘தண்ணி’ ஊற்றி அணைத்தபடி

வெற்றுடலாய் அலைவோம்.

 

அயலவர்கள் வெறுந்தலையர் என விரட்ட

மருந்திழந்த (தீக்) குச்சியென

விழுந்திடவா நாம் பிறந்தோம்- இல்லை

இனியாவது நாம் எழுவோம்

வாசிப்பின் மேன்மை போற்றுவோம்

அறிவுத் தீ மூட்டும் தீக்குச்சிகள் சேர்ப்போம்

அவை தரும் மருந்தின் வெம்மைகளை

சிரசில் சேர்ப்போம்

நூலகச் சிறையின் கைதிகள் ஆவோம்

நூலகத் தீ முதல் ‘உதயன்’ தீ வரை

எண்ணிறந்த தீக்குச்சிகள் வீணாய்ப் போனபின்

எழுத்துக்களா இனிச் சூடேற்றப் போகிறது.

 

என் எழுத்துக்களைக்கூட சாய்த்தே எழுதுகின்றேன்

நிமிர்த்தி எழுதினால் அவற்றைச் சில பேனாக்கள் வெட்டும் எரிக்கும்.

ஏனிப்படி நாம்

எரிந்த தீக்குச்சி ஆனோம்.

 

இனி

பிறக்கும் பிஞ்சுகளுக்கும்

நூலகத்தின் வெம்மை தெரிய வேண்டும்

வாசிப்பின் வலி புரிய வேண்டும்

 

சுற்றுலாவிகளாய் அன்றி

மனிதம் மிக்க வாசகராய்

இந்நூலாலயத்திற்கு

நித்தம் வருதலின் அர்த்தம் தெரியவேண்டும்.

 

அவர்களைக் கொஞ்சம்

சந்திக்க விடுங்கள் – நூலகத்தைச்

சற்று சிந்திக்க விடுங்கள்

 

அவர்களையாவது

வாசிக்கப்பழக்குவோம்

வரலாற்றைப் பேணுவோம்

 

 

சுடரேற்றவாவது இருக்கட்டும்

சில எரியாத தீக்குச்சிகள்

 

எல்லோரும் உரசிப் போகின்றார்கள்

நாங்கள் பற்றுவதே இல்லை

நூலகம் முதல் உதயன் வரை

எம்முள் வெம்மை விதைக்கப் போராடும்

தீந்தழல் வாழ்க!

வெந்தழல் வெல்க!

 

‘ரிதம்’

Share this on WhatsApp
admin

admin

Related Posts

அன்புடன் வல்வைக்கு…… வல்வையரின்  மாபெரும் பட்டப்போட்டி பற்றிய ஒரு கவிதை….

அன்புடன் வல்வைக்கு…… வல்வையரின் மாபெரும் பட்டப்போட்டி பற்றிய ஒரு கவிதை….

by admin
06/01/2017
0

வல்வை மு.ஆ.சுமன் கவிதைகள்

வல்வை மு.ஆ.சுமன் கவிதைகள்

by admin
07/10/2016
0

ஈழத்தின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் மு.ஆ.சுமன் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசித்து வருகிறார். கவிதை எழுதுவதோடு மட்டுமல்லாது நடிப்புத் துறையிலும் தன்னை நிலைநிறுத்தி வரும் வல்வை சுமன் அவர்கள்,...

என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப்  புழுதியில் யார் எறிந்தார்!!!

என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார் எறிந்தார்!!!

by admin
01/03/2015
0

                        என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார்...

ஈழத்தவர் இப்படித்தான் என்று, உன் ஈர விழியோடு கூறி விட்டாய்.

ஈழத்தவர் இப்படித்தான் என்று, உன் ஈர விழியோடு கூறி விட்டாய்.

by admin
23/02/2015
0

                ஏங்கி ஏங்கியே வாழும் எங்களின் வாழ்வின் வலியை ஒற்றை ஆளாய் நின்று ஓங்கி ஒலித்த எங்கள்...

வல்வெட்டித்துறையின் வளமானவன் முல்லை திவ்வியனின் சஞ்சிகை கவிதை தொகுப்புக்களும், வரலாற்று விளையாட்டு சாதனைகளையும் படங்களில் காணலாம்

by admin
25/11/2014
0

வல்வெட்டித்துறையின் வளமானவன் முல்லை திவ்வியனின் சஞ்சிகை கவிதை தொகுப்புக்களும், வரலாற்று விளையாட்டு சாதனைகளையும் படங்களில் காணலாம்

தமிழீழம்

தமிழீழம்

by admin
20/04/2013
0

தமிழீழம்             வடக்கு, கிழக்கு மற்றும் உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழர்களின் உயிர் மூச்சான பூமி தமிழீழம் !...

Next Post
மட்டக்களப்பு செல்லக் கதிர்காம ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் உடைத்து கொள்ளை- மேலும் இரு கோயில்களில் திருட்டு

மட்டக்களப்பு செல்லக் கதிர்காம ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் உடைத்து கொள்ளை- மேலும் இரு கோயில்களில் திருட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

21/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.