கூடைபந்தாட்ட போட்டியில் நெடியகாடுமகளிர்அணி இரண்டாமிடம்
பருத்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளிற்கிடையில் 2019 ம் ஆண்டிற்கான விளையாட்டு விழாவின் பெண்களுக்கான கூடை பந்தாட்ட போட்டி
பருத்துறை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் 2019/03/11 மாலை 3.30 மணியளவில் ஆரம்பமானது இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில்
இறுதி ஆட்டத்தில் நக்கீரன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து மோதிய நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
செல்வி.ஜெ.பிரியா செல்வி.க.யாழினி செல்வி.ஞா.தயாநிதி செல்வி.போ.அலக்சனா செல்வி.கி.நிகல்யா ஆகியோர் போட்டியில் களமிறங்கி இருந்தனர் அவர்களுக்கும் அவர்களை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்









