Wednesday, August 26, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home மருத்துவம்

பற்கள் ஆரோக்கியமானதா? பற்பசை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

by admin
04/02/2013
in மருத்துவம்
0
பற்கள் ஆரோக்கியமானதா? பற்பசை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

”பற்கள் சரியில்லை என்றால், உண்ணுகின்ற உணவில் இருக்கும் ஊட்டச் சத்து முழுமையாக நமது உடலுக்குக் கிடைக்காது. பற்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்”

”எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் இளம் வயதிலேயே தொடங்குவதுதான் நல்லது. அதனால்தான், முன்னேற்றம் அடைந்த பல நாடுகளிலும் பற்கள் பராமரிப்பு பற்றி பள்ளி, வீடு எனப் பல இடங்களிலும் சொல்லித்தருகிறார்கள். பற்கள் முளைக்க ஆரம்பித்ததில் இருந்து, சுமார் ஆறேழு வருடங்கள் வரை பிள்ளைகளுக்குப் பெற்றோர் பிரஷ் செய்துவிட வேண்டும்.

சிறுவயது முதலே பற்களைச் சரிவரக் கவனிக்காமல் விட்டுவிட்டால், சொத்தைப் பல், ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் கூச்சம் போன்ற பிரச்னைகள் வரும். அதனால், சிறுவயதில் இருந்தே பற்களைப் பராமரிப்பது அவசியம்.”

பற்பசை சொத்தைப் பல் இருப்பவர்கள் ஃப்ளோரைடு உள்ள பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு மிகவும் சூடாகவோ, மிகவும் குளிர்ச்சியாகவோ இருக்கும் உணவுகளை உண்டால், பற்கூச்சம் ஏற்படும். அவர்கள் ஸ்ரான்ட்டியம் குளோரைடு உள்ள பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். சிலருக்குப் பல் ஈறுகளில் ரத்தம் கசியும். ஈறுகள் வலிமை இழந்தாலோ அல்லது வைட்டமின் சி குறைபாடு இருந்தாலோ, ரத்தம் கசியும். அத்தகைய பற்களை உடையவர்கள் டேனிக் அமிலம் உள்ள பற்பசையைப் பயன்படுத்த வேண்டும்.

புகைபிடிப்பவர்கள், வெற்றிலை பாக்குப் போடும் பழக்கம் உடையவர்களுக்குப் பற்கள் நிறம் மாறிவிடும். தாது உப்புகள், வைட்டமின்கள், பொஸ்பரஸ், கல்சியம் போன்ற ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பற்களின் நிறம் மாறக்கூடும். இத்தகைய பற்கள் உடையவர்கள் ஒயிட்டனிங் ஏஜென்ட் உள்ள பற்பசைகளை உபயோகிக்க வேண்டும்.

வாய் துர்நாற்றம் இருக்குமானால் நறுமணத்துடன் கூடிய பற்பசையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு என்று பிரத்யேகமாக இருக்கும் பற்பசைகளை உபயோகிக்கலாம். ஆனால், அவர்கள் அதை விழுங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். பற்பசைகளைப் பயன்படுத்தும் முன் மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்டுப் பயன்படுத்துவது அவசியம்.

டூத் பிரஷ் டூத் பிரஷ்களில் பல வகைகள் உண்டு. பல் வரிசை சீராக இருந்தால், நேராக உள்ள பிரஷைப் பயன்படுத்தினால்தான் பற்களில் உள்ள அசுத்தங்கள் போகும். வளையும் தன்மைகொண்ட பிரஷ் இந்த விஷயத்தில் உகந்தது அல்ல. வரிசை தப்பிய பற்கள் உடையவர்களுக்கு வளையும் தன்மைகொண்ட பிரஷ்கள் பொருத்தமாக இருக்கும். எப்போது நம் பிரஷ்ஷின் நார்கள் வளைய ஆரம்பிக்கிறதோ, உடனே பிரஷ்ஷை மாற்றியாக வேண்டும். பற்களில் கிளிப் போட்டு இருப்பவர்களுக்கு என்று ஆர்தோடான்டிக் பிரஷ்கள் உள்ளன. அவர்கள் அதை உபயோகிக்கலாம். பிரஷ்ஷை உபயோகிக்கும்போது பற்களில் மட்டும் தேய்க்காமல் ஈறுகளிலும் ஒத்தி எடுக்கவேண்டும். இப்படிச் செய்தால் ஈறுகளில் ரத்த ஓட்டம் சீராக அமையும். பற்களும் பலம் பெறும்.

எலக்ட்ரி பிரஷ்கள் உபயோகிக்கும்போது நீண்ட நேரம் பல் தேய்க்காமல் இருப்பது அவசியம். பொதுவாக, பிரஷ்ஷை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம் இல்லை. நம் பற்களில் உள்ள பூஞ்சைகள் போகும் அளவுக்குத் தேய்த்தால் போதுமானது. ஒவ்வொருவருக்கும் பற்களின் மேல் படியும் பூஞ்சைகளின் அளவு மாறுபடும். அதற்கேற்ப பிரஷ்களை உபயோகப்படுத்தலாம். (ஹார்ட், மீடியம், ஷொப்ட்).

பிரஷ் பயன்பாடு குறித்துப் பட்டியல் போட்டு விளக்கும் டாக்டர் ஜானகிராமன், ”எந்த வகை பிரஷ்ஷாக இருந்தாலும் தினசரி இரு வேளைகள் பல் துலக்குவது அவசியம். அதுவும் காலை பெட் காபி குடிப்பவர்கள் கண்டிப்பாக இரவு பல் துலக்குவது அவசியம். பற்களை நாம் எந்த அளவுக்குப் பராமரிக்கிறோமோ, அந்த அளவுக்கு நம் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். பெரியவர்கள் பயன்படுத்தும் டூத் பிரஷ்கள் குழந்தைகளுக்குக் கடைவாய்ப் பல் வரை செல்லாது. இந்த வயதுவரம்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் முக்கியம்”

குச்சிகளைப் பயன்படுத்திப் பல் தேய்த்த காலத்தில்கூட ஆல, வேல மரக் குச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பல் நலம் பேணியவர்கள் நம் மூதாதையர்கள். சரியான தேர்ந்தெடுப்புதான் நம்மைச் சரியாக வைத்திருக்கும். பல் துலக்கும் முன் ‘எந்த பிரஷ் சரிப்படும்?’ என்கிற பரிசீலனையைத் துவக்குங்கள்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

தொப்பை வேகமாக குறைய எளிய பயிற்சி

by admin
20/04/2017
0

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவல்ல சௌ சௌ..!

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கவல்ல சௌ சௌ..!

by admin
03/01/2015
0

நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் சௌ சௌவும் ஒன்று. சௌ...

அல்சரும்… உண்மையும்…

அல்சரும்… உண்மையும்…

by admin
02/01/2015
0

நேரத்திற் குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் சரியான நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து...

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

செரிமான பிரச்சனையா? இதை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க

by admin
30/12/2014
0

தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தப்படும் தயிரானது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. இதனை தினமும் பயன்படுத்துவது...

அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..

அழகு விஷயத்தில் பலரும் செய்யும் தவறுகள்..

by admin
29/12/2014
0

எல்லோருமே தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சிலருக்கு அதற்கான நல்ல ரசனை இருக்கும். நேரம் இருக்கும். ஆனால், சிலருக்கு நேரம் இருக்காது அல்லது...

வண்ணங்கள் வாழ்க்கையை இருட்டாக்கும்….

வண்ணங்கள் வாழ்க்கையை இருட்டாக்கும்….

by admin
13/12/2014
0

வீட்டில் அடிக்கடி செய்யும் இனிப்பு பண்டம் என்றால் அது கேசரியாகவோ, பாயசமாகவோ தான் இருக்கும். கேசரியில் சேர்க்கப்படும், முந்திரிப் பருப்பு, திராட்சை போன்ற பொருட்களில் சுவையும், சத்தும்...

Next Post
அரிசோனா பாலைவானத்தில் மர்ம உருண்டைகள்: வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவையா?

அரிசோனா பாலைவானத்தில் மர்ம உருண்டைகள்: வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவையா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Account
  • Amman 3rd day 2016
  • Amman 4th day 2016
  • blues
  • Blues Athletic 2024
  • blues sports 2022
  • E2S நிறுவனத்தின் 11 +mock Exam
  • Elementor #277245
  • Elementor #358695
  • Home
  • Home Page
  • Latest
  • LAVAN WEDDING
  • Login
  • Logout
  • Members
  • Open
  • over 40
  • over 50
  • Password Reset
  • Register
  • Sivan 2017
  • test
  • TEST
  • under 11
  • under 13
  • under 15
  • under 17
  • under 19
  • under 9
  • User
  • Valvai Blues Athletic 2022
  • WINTER 2024
  • எம்மைபற்றி
  • சரஸ்வதி பூசை ,விஜயதசமி
  • செய்திகள்
  • தொடர்வு
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ,இ) 2020ம் ஆண்டுக்கான நிகழ்வுகளின் விபரங்கள்
  • வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி 2017
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 2ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 3ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 4ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன்5ம் திருவிழா 2019
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017
  • ஸ்ரீ முத்துமாரி இம்மன் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆறாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் இரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் எட்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஏழாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் நான்காம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதினொராம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதின்மூன்றாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பத்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பன்னிரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் மூன்றாம் திருவிழா 2018

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.