வல்வை தீருவில் 19 வயதின் கீழ் இறுதி உதை சுற்றில் இளங்கதிர் வி.க,வெற்றி பெற்று தீருவிலின் 19 வயதின் கீழ் சம்பியன் கேடையத்தை தட்டிச்சென்றது.
வல்வை தீருவில் இளைஞர் விளையாட்டுக் கழக 72வது வருட நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுவிழா முதல் நிகழ்வு 19 வயதின் கீழ் 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நான்காம் நாள் 14.04.2019
இறுதி சுற்றில் சைனிங்ஸ் எதிர் இளங்கதிர் மோதி 04:00 என்ற கோலினால் இளங்கதிர் வெற்றி பெற்றது.
இளங்கதிர் அணிசார்பாக பிரசாந்தன் 2 கோல்களையும் கிருஷாந் பிரதீபன் தலா 1 கோலினையும் பெற்றுக்கொடுத்தனர்.



























