யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிகளுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த அவசியமான சூழ்நிலையில்
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 90 வது இரத்ததான நிகழ்வானது
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இடம் – பலாலி, அந்தோனிபுரம் ,
வனத்து அந்தோனியார் ஆலயம்.
காலம் – 15/11/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல்
ஏற்பாடுகள் –
1. வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம்
2. பலாலி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்.
3. வளலாய் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்.
4. விண்மீன் விளையாட்டுக் கழகம்.
5. சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு.
18 வயதிற்கு மேற்பட்ட 55 வயதிற்கு உட்பட்ட அனைவரும் குருதிக் கொடை வழங்க வாருங்கள்.
மேலும் நீங்கள் ஏற்கனவே குருதிக் கொடை வழங்கி இருந்தால் 60 வயதுவரை குருதிக் கொடை வழங்க முடியும்.
இந்த இரத்ததான நிகழ்வுக்கு 20/07/2026 இற்கு முன்னர் குருதிக் கொடை வழங்கிய அனைவரும் குருதிக் கொடை வழங்க வாருங்கள்.
மிகவும் சிரமமான குருதி பற்றாக்குறை நிலையில் இருக்கும் போது உயிர்களைக் காப்பாற்ற குருதிக் கொடை வழங்க வருமாறு உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இந்த இரத்ததான நிகழ்வானது பல கிலோமீட்டர் தொலைவில் வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஆகிய நாம் சென்று அங்குள்ள வணக்கத்துக்குரிய பங்குத்தந்தை மற்றும் மக்களின் ஆசீர்வாதத்துடன் நடைபெற உள்ளது.
நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் ஊக்குவிப்பு வழங்கி குருதிக் கொடை வழங்க அழைத்து வாருங்கள்.
இந்த இரத்ததான நிகழ்வுக்கு குருதிக் கொடை வழங்கிய உடனேயே கௌரவமான சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இப்போது முதல் முன்பதிவு செய்து உதவுங்கள் நன்றி.
வாழ்வோம் நான்கு உயிர்களை வாழ வைத்த திருப்தியுடன் வாழ்வோம்.
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் தலைவர்
பா. வீரசுரேந்திரன்
0779911131











