அதிபர் திரு. இ. சுதர்சன் அவர்களின் தலைமையில் தையல் பகர் அரங்கத்தில் நேற்று கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வன் தட்சன் ரிதிக்ஸன் அவர்களும், தேசிய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்ற செல்வி சசிகரன் கானவர்ஷினி அவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை மாதாவிற்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்கள் மேலும் பல சாதனைகளைப் படைத்திட பாடசாலைச் சமூகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.























