
வடமராட்சி சிரேஷ்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் வல்வை விளையாட்டுக்கழகம் வல்வை சிரேஸ்டவீரர்கள் அனுசரணையுடன் நடாத்தும் வடமராட்சி ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் லீக் முறையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024.
06/10/2024 நடைபெற்ற ஆட்டத்தில் கொலின்ஸ் அணியினை எதிர்த்து டயமன்ஸ் அணியானது மோதியது. இவ்வாட்டத்தில் டயமன்ஸ் அணியானது 3:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
கோல் அடித்தோர்
டயமன்ஸ்
ராஜ்:- 02
ரமணன்:- 01
கொலின்ஸ்
சசி :− 01
போட்டியின் ஆட்டநாயகனாக டயமன்ஸ் அணியின் ராஜ்குமார் தெரிவு செய்யப்பட்டார்.










