Saturday, August 29, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home செய்திகள்

இலங்கை – இந்தியா – அமெரிக்கா கூட்டுச் சதி! – விளக்குகிறார் வேல்முருகன்

by admin
13/03/2013
in செய்திகள்
0
இலங்கை – இந்தியா – அமெரிக்கா கூட்டுச் சதி! – விளக்குகிறார் வேல்முருகன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குரல் முழக்கம் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. அதே நேரத்தில், ‘இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உப்புசப்​பில்லாத தீர்மானத்தால் எந்தப் பலனும் இல்லை’ என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்.

கேள்வி: அமெரிக்கா கொண்டு​வரும் தீர்மானம் தமிழர்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்குமா?

பதில்:  ராஜபக்ச அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை​கள் ஆணையக் கூட்டத்தில் கடந்த ஆண்டு அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தால் என்ன நடந்துவிட்டது? போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை​களை நிறைவேற்ற வேண்டும், போர்க் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் தண்டிக்க வேண்டும் என்பதெல்லாம் என்ன ஆனது?

இந்தத் தீர்மானம் நிறைவேறிய பிறகும், தமிழர்கள் மீதான சித்திரவதை தொடர்கிறது. இளைஞர்கள் திடீர் திடீரென்று கைதுசெய்யப்படுகிறார்கள். காணாமல் போகிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. தமிழர் பகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்​பாட்டில் உள்ளது.

போர் நடைபெற்ற பகுதிகளில் புனரமைப்பு செய்ய இந்தியாவும் உலக நாடுகளும் கொடுத்த நிதியில், போரில் பலியான சிங்கள வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஊனமுற்ற சிங்கள வீரர்களுக்கு மறுவாழ்வு என்று பல பணிகள் நடக்கின்றன.

ஆனால், ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலை நாளுக்கு நாள் மோச​மாகி வருகிறது. 10 கோடி உலகத் தமிழர்களையும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்​களையும் இலங்கை – இந்தியா – அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டுசேர்ந்து ஏமாற்றி வருகிறது.

கேள்வி: அமெரிக்கத் தீர்மானத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்கிறீர்களா?

பதில்: கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்​படவில்லை என்று அமெரிக்காவே கவலை தெரிவித்துள்ளது.

ஆனால், அதே அமெரிக்காதான் மார்ச் 7-ம் திகதி அன்று, இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த ஐந்து லட்சம் அமெரிக்க டாலர் நிதிஉதவி அளித்துள்ளது. இந்திய அரசும் பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இந்தியா முன்னின்று நடத்திய ஈழத் தமிழர் இனப் படுகொலையை அமெரிக்காவும் ஐ.நா. சபையும் மௌனமாக வேடிக்கை பார்த்தது. சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கவே இலங்கைக்கு உதவுவதாக இந்தியா நாடகமாடுகிறது. இந்த சர்வதேச அரசியல் நாடகத்தை தமிழ் தேசிய சக்திகள் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று அமெரிக்கா இப்போது வலியுறுத்தியுள்ளதே?

பதில்: அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய அதிகாரிகள், கடந்த மாதம் வவுனியாவில் முகாமிட்டு இலங்கை இராணுவத்தினருக்குப் போர்ப் பயிற்சிகளை அளித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ஆட்டம் ஓய்ந்துவிட்டது. அதாவது, அமெரிக்காவின் ஈராக் பங்களிப்பு முடிந்துவிட்டது. அதனால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிக் கவனத்தைத் திருப்பியுள்ளது.

அமெரிக்காவுக்கு இந்தியா உற்ற துணையாக இருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் இலங்கையைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. எனவேதான், அமெரிக்கா இப்போது கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா கூறிய திருத்தத்துடன் தாக்கல் ​செய்துள்ளது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினாலும், இலங்கையின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் செய்துவிட முடியாது.

இலங்கைத் தமிழர்கள் மீது உண்மை​யிலேயே அமெரிக்​காவுக்கு அக்கறை இருந்தால், ஐ.நா. தலைமையில் சர்வதேசப் போர்க் குற்ற விசாரணை, இலங்​கைத் தமிழர்களுக்கு இறுதி அரசியல் தீர்வு காணும் வரை பொருளாதாரத் தடை தனித் தமிழீழம் அமையப் பொது வாக்கெடுப்பு ஆகிய தீர்மானங்களை அமெரிக்கா கொண்டுவந்திருக்க வேண்டும். இதற்கு இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும்.

கேள்வி: விடுதலைப் புலிகள்தான் தங்கள் எதிரி, ஈழத் தமிழர்கள் இல்லை என்று காங்கிரஸ் கூறுகிறதே?

பதில்: ஈழத் தமிழர்கள் மீது மட்டுமல்ல… இந்தியாவில் வாழும் தமிழர்கள் மீதே அவர்​களுக்கு அக்கறை இல்லை. இதுவரை 650-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. அதைக் கேட்க நாதியில்லை.

பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைபற்றி, நாடாளு​மன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் கொதித்தெழுந்தன. ஆனால், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மௌனமாகவே இருந்தார்.

இலங்கைத் தமிழர்கள் மீது காங்கிரஸுக்கு உண்மை​யிலேயே அக்கறை இருந்தால், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழியட்டும்.

2011-ல் தெற்கு சூடான் பிறந்ததுபோல, ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்கட்டும். இவ்வாறு  காங்கிரஸுக்கு சவால்விடுகிறார் வேல்முருகன்.

ஜூனியர் விகடன்

Share this on WhatsApp
admin

admin

Related Posts

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

இமயமலை ‘சுனாமி’: நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 389 ஆக உயர்வு – 1,300-க்கும் மேற்பட்டோர் மாயம்

by சேரன்
27/08/2026
0

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே 1,300-க்கும் மேற்பட்டோர்...

செம்மணியின் உண்மையை கண்டறிவோம் – யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

செம்மணியின் உண்மையை கண்டறிவோம் – யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

by சேரன்
26/08/2026
0

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் செயற்பாடுகள் நிதி பற்றாக்குறை காரணமாக ஒருபோதும் நிறுத்தப்படாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட...

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

by சேரன்
23/08/2026
0

தெற்காசியாவில் பொதுமக்களால் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை உருவெடுத்துள்ளதாக Pew Research Center மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை...

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

by சேரன்
21/08/2026
0

யாழ்ப்பாணம்: பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புகள் காரணமாக இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

by சேரன்
20/08/2026
0

இலங்கை தற்போது பல தசாப்தங்களில் காணப்படாத அளவுக்கு தீவிரமான எல் நினோ (El Niño) காலநிலை நிலைமையை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்...

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

by சேரன்
18/08/2026
0

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபர் ஒருவரின் 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. டொக்டர்...

Next Post
செவ்வாய் கிரகத்தில் களிமண்: கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் களிமண்: கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

21/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.