Thursday, August 27, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

by admin
16/02/2013
in ஆன்மிகம்
0
திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் மாசித்திருவிழா சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில் ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றன. இந்த ஆண்டு திருக்கோயிலில் மாசித்திருவிழா சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30  மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,  3 உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேதபாராயணங்கள் பாட, வானவேடிக்கை வெடிக்க அதிகாலை 5.15 மணிக்கு மகர லக்னத்தில் கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய ச.சந்தோஷ்குமார் சிவாச்சாரியார் மாசித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினார். தொடாந்;து கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், வாசனைத்திரவியங்கள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்;கள் மற்றும் சிறப்பு அலங்காரமாகி  காலை 6.25 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. வேதவிற்பன்னர்கள் வேதபாராயணமும், திருக்கோயில் ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாடினர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக பிப்ரவரி 20-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பிப்ரவரி 21-ம் தேதி ஆறாம் திருவிழாவன்று காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீத உலா வரும். பிப்ரவரி 22-ம் தேதி அன்று ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு முதல் 5.30 மணிக்குள் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 8.45  மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றி வேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்;, அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 23-ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை  பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி சுவாமி எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோவில் வந்;து அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று காலை 10.30 மணிக்கு 11.30 மணிக்குள் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் வந்து சேர்கிறார்.

மேலும் 24-ம் தேதியன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி; தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழா தேரோட்டம் வருகின்ற 25-ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் கும்ப லக்னத்தில் தேரோட்டம் துவங்குகிறது. பிள்ளையார் ரதம்;, சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலையினை அடையும்.

தெப்பத்திருவிழா

பிப்ரவரி 26-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு சுவாமி மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி எழுந்தருளி இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தெப்பத்தில் எழுந்தருளி  11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறுகிறது. 27-ம் தேதி 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பொ.ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் இரா.சாத்தையா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

நடைதிறப்பு நேரம் :

மாசித்திருவிழாவை முன்னிட்டு, திருக்கோவில் 1-ம் திருவிழா மற்றும் 7-ம் திருவிழா ஆகிய நாட்களில் அதிகாலை 1 மணிக்கும், 2-ம் திருவிழா, 9-ம் திருவிழா நாட்களில் அதிகாலை 4 மணிக்கும், மற்ற நாட்களில் கோவில் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகின்றது.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் தொடக்கம்

by admin
12/03/2013
0

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சாத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை யானை மீது வைத்து கொண்டு வரப்படும் பூக்கூடை . திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

by admin
24/02/2013
0

திருச்செந்தூர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 7–ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா

by admin
17/02/2013
0

திருச்செந்தூர், பிப்.17 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருக பெருமானின் 2​ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில்...

இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு?

by admin
29/01/2013
0

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்களை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈ்டுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப் போல அங்கிருந்த இந்து...

பழனி – திருச்செந்தூர் கோவில்களில் குவியும் பக்தர்கள்

by admin
29/01/2013
0

திருச்செந்தூர். ஜன. - 28 -  தைப்பூசத்திற்காக திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவில் நடை இன்று அதிகாலை...

Next Post
உடலுக்கு தேவை நடை பயிற்சி

உடலுக்கு தேவை நடை பயிற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Account
  • Amman 3rd day 2016
  • Amman 4th day 2016
  • blues
  • Blues Athletic 2024
  • blues sports 2022
  • E2S நிறுவனத்தின் 11 +mock Exam
  • Elementor #277245
  • Elementor #358695
  • Home
  • Home Page
  • Latest
  • LAVAN WEDDING
  • Login
  • Logout
  • Members
  • Open
  • over 40
  • over 50
  • Password Reset
  • Register
  • Sivan 2017
  • test
  • TEST
  • under 11
  • under 13
  • under 15
  • under 17
  • under 19
  • under 9
  • User
  • Valvai Blues Athletic 2022
  • WINTER 2024
  • எம்மைபற்றி
  • சரஸ்வதி பூசை ,விஜயதசமி
  • செய்திகள்
  • தொடர்வு
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ,இ) 2020ம் ஆண்டுக்கான நிகழ்வுகளின் விபரங்கள்
  • வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி 2017
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 2ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 3ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 4ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன்5ம் திருவிழா 2019
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017
  • ஸ்ரீ முத்துமாரி இம்மன் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆறாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் இரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் எட்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஏழாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் நான்காம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதினொராம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதின்மூன்றாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பத்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பன்னிரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் மூன்றாம் திருவிழா 2018

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.