Thursday, August 27, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

by admin
24/02/2013
in ஆன்மிகம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவின் 7–ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவின் 7–ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின், சுவாமி சண்முகர் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி, சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கும் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள சிவப்பு சாத்தி மண்டபத்திற்கு வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார்.

வீதி உலா

சிவப்பு சாத்தி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார்.

சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

8–ம் திருநாள்

8–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து, வெண்ணிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமிக்கு அணிகலன்கள் அணிவது கிடையாது. காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கீழக்கோவில் சேர்கிறார்.

10–ம் திருநாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11–ம் திருநாளான 26–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றி தெப்ப உற்சவம் வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

பக்தர்கள் கூட்டம்

மாசி திருவிழாவின் 7–ம் திருநாளான நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பொ.ஜெயராமன், அலுவலக கண்காணிப்பாளர் இரா.சாத்தையா மற்றம் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் தொடக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் தொடக்கம்

by admin
12/03/2013
0

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சாத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை யானை மீது வைத்து கொண்டு வரப்படும் பூக்கூடை . திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா

by admin
17/02/2013
0

திருச்செந்தூர், பிப்.17 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருக பெருமானின் 2​ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில்...

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

by admin
16/02/2013
0

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் மாசித்திருவிழா சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவற்றில்...

இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு?

by admin
29/01/2013
0

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்களை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈ்டுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப் போல அங்கிருந்த இந்து...

பழனி – திருச்செந்தூர் கோவில்களில் குவியும் பக்தர்கள்

by admin
29/01/2013
0

திருச்செந்தூர். ஜன. - 28 -  தைப்பூசத்திற்காக திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவில் நடை இன்று அதிகாலை...

Next Post

கணித திறமையை வளர்த்துக் கொள்ள....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Account
  • Amman 3rd day 2016
  • Amman 4th day 2016
  • blues
  • Blues Athletic 2024
  • blues sports 2022
  • E2S நிறுவனத்தின் 11 +mock Exam
  • Elementor #277245
  • Elementor #358695
  • Home
  • Home Page
  • Latest
  • LAVAN WEDDING
  • Login
  • Logout
  • Members
  • Open
  • over 40
  • over 50
  • Password Reset
  • Register
  • Sivan 2017
  • test
  • TEST
  • under 11
  • under 13
  • under 15
  • under 17
  • under 19
  • under 9
  • User
  • Valvai Blues Athletic 2022
  • WINTER 2024
  • எம்மைபற்றி
  • சரஸ்வதி பூசை ,விஜயதசமி
  • செய்திகள்
  • தொடர்வு
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ,இ) 2020ம் ஆண்டுக்கான நிகழ்வுகளின் விபரங்கள்
  • வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி 2017
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 2ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 3ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 4ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன்5ம் திருவிழா 2019
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017
  • ஸ்ரீ முத்துமாரி இம்மன் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆறாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் இரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் எட்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஏழாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் நான்காம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதினொராம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதின்மூன்றாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பத்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பன்னிரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் மூன்றாம் திருவிழா 2018

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.