Friday, August 28, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home சிறப்பு செய்திகள்

பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் 84ஆவது வயதில் இயற்கை எய்தினார்

by admin
23/12/2014
in சிறப்பு செய்திகள்
0
பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் 84ஆவது வயதில் இயற்கை எய்தினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.

பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், இன்று மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு தற்போது திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகிறார்கள்.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார். பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்படும் கே.பாலச்சந்தர், ‘நீர்க்குமிழி’ தொடங்கி ‘பொய்’ வரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். அதிகமான டி.வி தொடர்களும் இயக்கி இருக்கிறார்.

‘பொய்’, ‘ரெட்டை சுழி’ மற்றும் ‘உத்தம வில்லன்’ ஆகிய 3 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றவர் கே.பாலசந்தர்.

இயக்குநர் சிகரத்தின் கலைப் பயணம்:

கே.பாலசந்தர் தன் வாழ்க்கையில் பல படிக்கட்டுகளைக் கடந்து முன்னேறி வந்தவர். நாடகங்கள் மூலம் பிரபலமான இவர் திரைப்படத்துறையில் தனக்கேயுரிய முத்திரையைப் பதித்தவர். இன்று அவர் நம்மிடையே இல்லை.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு படித்த பாலசந்தர் படிக்கும் போதே 1960-களில் தலைமை கணக்காளர் அலுவலகத்தில் உயர்பதவியில் இருந்தார்.

‘மேஜர் சந்திரகாந்த்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘நீர்க்குமிழி’, ‘மெழுகுவர்த்தி’ மற்றும் ‘நவக்கிரகம்’ உள்ளிட்ட பிரபல நாடகங்கள் மூலம் அவர் முன்னணிக்கு வந்தார். அவரே தயாரித்து, இயக்கிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சகர்களின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றது.

திரைப்படத் துறையில் அவர் 1965-ஆம் ஆண்டு நுழைந்தார். தன் முதல் படத்தில் நாகேஷை குணச்சித்திர பாத்திரத்தில் நடிக்க வைத்த அவரது ‘நீர்க்குமிழி’ அவருக்கு பெரும்புகழை ஈட்டித் தந்தது.

அது முதல் வெள்ளித்திரையில் அவர் ஒரு நட்சத்திர இயக்குநராக ஜொலிக்கத் தொடங்கினார். அதன் பிறகு பல மொழிகளிலும் திரைக்கதை, வசனம், இயக்கம் என்று அவரது பணி பரவலாக்கம் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் இவரது படங்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. காதல் கதைக்கு இவரது இந்திப் படமான ‘ஏக் துஜே கே லியே’ ஒரு பெரும் முன்னோடியாகத் திகழ்ந்தது.

தெலுங்கில் ‘மரோசரித்ரா’ என்ற படம்தான் இந்தியில் ‘ஏக் துஜே கே லியே’-வாக மாறியது. தெலுங்கில் சரிதா நாயகியாக நடிக்க கமல்ஹாசன் நாயகன். இந்தியில் சரிதாவுக்கு பதிலாக ரதி அக்னிஹோத்ரியை கமலின் நாயகியாக நடிக்க வைத்தார். தெலுங்கு, இந்தி இரண்டிலுமே இந்தப் படம் பல மைல்கல்களைக் கடந்து சென்றது.

மைய நீரோட்ட வணிக சினிமாவில் இயங்கினாலும், சமரசமற்ற தன்மையில் அவரிடம் தனிச்சிறப்பான உத்திகள் பளிச்சிட்டது. சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் வடிவ ரீதியில் ஒவ்வொரு விதமாகவும் அவர் படங்களை கொடுத்து வந்தார். பல படங்கள் சமூக-அரசியல் புலத்தை கதைக்கருவாக கொண்டது. நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கை முறை அவரது படங்களில் சிறப்பாக கையாளப்பட்டது.

சினிமாவில் சமூகப் புரட்சி

பெண்கள் சமுதாயத்தின் பிரச்சினைகளை உரத்த குரலில் பேசியது இவரது சில படங்கள், அதோடு மட்டுமல்லாமல் அவர்களது உயர்வுக்கும் வித்திட்டது என்று கூறலாம்.

மது அருந்தும் பழக்கத்தின் தீமைகளை ’உன்னால் முடியும் தம்பி’ என்ற படத்தில் காட்டிய பாலசந்தர், சமுதாயத்திற்காக தன்னலமற்று உழைக்க வேண்டிய கடமையையும் அப்படத்தின் மூலம் உணர்த்தினார்.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல என்பதை தீவிரமாக நம்பிய அவர் தன் படத்தில் சமுதாயத்திற்கான் நற்செய்தி இருக்க வேண்டும் என்று நினைத்தார், அவ்வாறே படங்களையும் எடுத்தார்.

அவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார். இவரது படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலர் தேசிய, மாநில அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளனர்.

திறமைகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. இன்று நட்சத்திரங்களாகத் திகழும் பலர் இவரது கைவண்ணத்தில் உருவானவர்களே. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விவேக், பிரகாஷ் ராஜ், ஏ.ஆர். ரஹ்மான் என்று இந்தப் பட்டியல் இன்னும் நீளலாம்.

எத்தனையோ இளம் இயக்குநர்கள், திறமையான புதிய இயக்குநர்கள் உருவாகி வந்த போதிலும் சுமார் 50 ஆண்டுகளாக இவர் படங்களை அவருக்கே உரிய தரத்துடனும் உற்சாகத்துடனும் கொடுத்து வந்தார். இவரது உத்திகள் பல இளம் இயக்குநர்களுக்கு பெரும் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

இளம் நடிகர்களுக்கு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்படியோ அப்படித்தான் இளம் இயக்குநர்களுக்கு இயக்குநர் திலகம் கே.பாலசந்தர்.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு…

தான் எடுத்துக் கொள்ளும் கதை மீதான உறுதிப்பாடு மற்றும் தான் நினைத்ததை கலைஞர்களிடமிருந்து தருவிக்க முடியக்கூடிய அவரது திறமையே கலைமட்டத்திலும், வணிக அளவிலும் அவரது பெரும் வெற்றிக்கு காரணம்.

கடந்த சில ஆண்டுகளாக சின்னத் திரையிலும் அவர் தனது முத்திரையைப் பதித்து வந்துள்ளார். வெள்ளித்திரையில் காண்பித்த அதே தீவிரம், காட்சியமைப்பில் துல்லியம் என்று இங்கும் அவர் சமரசத்திற்கு இடம் கொடுக்கவில்லை.

1990-களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தொடர் ரயில் ஸ்நேகம் சீரியல்கள் அளவில் ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்தது. கை அளவு மனசு என்ற தொடரும் மக்கள் மனதைக் கவர்ந்தது.

சன் தொலைக்காட்சியில் ரகுவம்சம் என்ற நெடுந்தொடர் மூலம் மெகா சீரியல்களும் ஏன் தரமாக இருக்கக் கூடாது என்ற சிந்தனையை இளம் இயக்குநர்கள் மத்தியில் ஏற்படுத்தினார் பாலசந்தர்.

இவரது படங்கள், அதன் கதைக்கரு, கதாபாத்திர உருவாக்கம், கதையாடல் முறை, உத்தி ஆகியவை இன்று மாணவர்களின் ஆய்வு செய்வதற்கு ஒரு கருவியாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

‘நினைத்தாலே இனிக்கும்’ குறிப்புகள்:

* ஹோலி பண்டிகை அன்று சிவாஜி ராவ் என்ற நடிகனுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றம் செய்தவர் கே.பாலசந்தர்.

* இயக்குநர் பாலசந்தரை தனது குருநாதராக பாவித்து வருபவர் கமல். காரணம், கமலின் திரையுலக வாழ்க்கையில் பல முக்கிய கதாபாத்திரங்களை அளித்து அவரை மெருகேற்றியவர் கே.பி

* திரைப்பட கல்லூரியில் பேசிய கே.பாலசந்தரிடம் அங்கு மாணவராக இருந்த சிவாஜிராவ் (ரஜினி) “நடிப்பைத் தவிர ஒரு நடிகனிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்க கே.பி சிரித்தபடி “கேமிராவிற்கு வெளியே அவர் நடிக்க கூடாது” என்று பதிலளித்தார் கே.பி.

தமிழ் சினிமாவுக்கு கே.பி. தந்த அறிமுகங்கள்:

நடிகர்கள்: ரஜினிகாந்த், விவேக், நாசர், ராதாரவி, சார்லி, பிரகாஷ்ராஜ், சரத்பாபு, சிரஞ்சீவி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.வி.சேகர், திலீப், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் வாலி, மதன் பாப், மேஜர் சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன்

நடிகைகள்: சுஜாதா, ஜெயப்பிரதா, சரிதா, ஜெயசித்ரா, படாபட் ஜெயலட்சுமி, ஸ்ரீப்ரியா, ‘கல்கி’ ஸ்ருதி, விஜி, சித்தாரா, ஸ்ரீவித்யா, பிரமிளா, ரதி, ஜெயசுதா, சுமித்ரா, பாத்திமா பாபு, யுவராணி, விசாலி கண்ணதாசன்

இயக்குநர்கள் விசு, மெளலி, அமீர்ஜான் மற்றும் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் ஆகியார் கே.பாலசந்தர் தயாரித்த படங்கள் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்கள்.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

நாதியற்றுப்போன ஈழத்தமிழனின் சாவுச் செய்தியில்கூட நஞ்சூட்டப்பட்டுள்ள கொடுமை!

by admin
09/03/2016
0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வருவாய் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால் விரக்தியடைந்த ரவீந்திரன் என்கிற ஈழத்தமிழ் ஏதிலியின் சாவுச்...

நேற்றைப்போல ஒரு இன்றும் ஒரு மாற்றமுமில்லாத நாளையும்…- ச.ச.முத்து

நேற்றைப்போல ஒரு இன்றும் ஒரு மாற்றமுமில்லாத நாளையும்…- ச.ச.முத்து

by admin
18/08/2015
0

இந்த ஆக்கம் வெளிவரும்போது ஒருவேளை வாக்குஎண்ணிக்கை தொடங்கிவிட்டிருக்கலாம்.முடிவுகளில் சிலகூட வெளியாகி இருக்கவும்கூடும்.புலத்தின் ஊடகங்கள் தமது நேரலை நிகழ்வுகளில் ஆய்வுகளை நடாத்தி மாற்றத்துக்கான ஒரு தேர்தல்போல ஒரு மாயையை...

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின! (இணையத்தளங்களில் பார்க்கமுடியும்)

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின! (இணையத்தளங்களில் பார்க்கமுடியும்)

by admin
30/03/2015
0

2014ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீடசை முடிவுகள் வெளியாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப்பரீட்சை முடிவுகளை www.doenets.lk , www.results.exams.gov.lkஆகிய இணையத்தளங்களில்...

என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப்  புழுதியில் யார் எறிந்தார்!!!

என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார் எறிந்தார்!!!

by admin
01/03/2015
0

                        என் தாய்த் தமிழே! நலம் கெட உன்னைப் புழுதியில் யார்...

யாழில் படைக்கெடுபிடிகள் மத்தியில் பல்கலை போராட்டம் பெருவெற்றி! திரண்டது தமிழ் சமூகம்!!

யாழில் படைக்கெடுபிடிகள் மத்தியில் பல்கலை போராட்டம் பெருவெற்றி! திரண்டது தமிழ் சமூகம்!!

by admin
24/02/2015
0

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள்  தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை...

நன்றி ஜசீகா…- ச.ச.முத்து

நன்றி ஜசீகா…- ச.ச.முத்து

by admin
24/02/2015
0

தமிழர்கள் எல்லோருக்குள்ளும் ஓலமிட்டுக்கொண்டிருக்கும் பெரு வலி ஒன்றை தாயகம் இழந்த பெரும் சோகத்தை உலகின் மெத்தனப்போக்கால் அழிக்கப்பட்ட ஒரு அருமையான விடுதலை போராட்டத்தின் நினைவுகளை மீட்டு எடுத்த...

Next Post
வல்வை விளையாட்டுக்கழகம் இறுதி ஆட்டத்தில் வெற்றி ( படங்கள் இணைப்பு)  -24.12.2014

வல்வை விளையாட்டுக்கழகம் இறுதி ஆட்டத்தில் வெற்றி ( படங்கள் இணைப்பு) -24.12.2014

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

21/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.