Saturday, October 3, 2026
Logo 2 Logo 2 Logo 3
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Logo 3 Logo 2 Logo 3
No Result
View All Result
Home வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையை உரிய வசதிகளுடன் மீளச் செயற்படுத்த கோரிக்கை

by சேரன்
10/09/2026
in வல்வை செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

வல்வெட்டித்துறை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும், பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகளின் உரிய கவனம் இன்றி காணப்படும் வைத்தியசாலையை தேவையான வசதிகளுடன் மீளச் செயற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை, 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 12,000 மக்களுக்கு சேவையாற்றும் முக்கியமான பிரதேச வைத்தியசாலையாக காணப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வெளிநோயாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.

120 கட்டில்கள் கொள்ளளவு இருந்தும் 85 கட்டில்களே பயன்பாட்டில்

வைத்தியசாலையில் 120 கட்டில்களை அமைக்கக்கூடிய வசதி இருந்தபோதிலும் தற்போது 85 கட்டில்களே பயன்பாட்டில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் நோயாளர்களுக்கு தேவையான உள்நோயாளர் சேவைகளை முழுமையாக வழங்குவதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேற்று சேவைகளை மீள ஆரம்பிக்க கோரிக்கை

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் 2009ஆம் ஆண்டு வரை பிரசவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. தற்போது பிரசவ அறைகள் தேவையான வசதிகளுடன் காணப்பட்டாலும், மகப்பேற்று வைத்திய நிபுணர் (VOG) ஒருவர் நிரந்தரமாக நியமிக்கப்படாத காரணத்தினால் அங்கு பிரசவ சேவைகள் இடம்பெறுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வைத்தியசாலையில் Scanner Machine வசதியும் இல்லை.

எனினும், VOG வைத்தியர் ஒருவர் நிரந்தரமாக நியமிக்கப்படும் பட்சத்தில் சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான Scanner Machine ஒன்றை கொள்வனவு செய்து வழங்குவதற்கு கொடையாளர் ஒருவர் தயாராக இருப்பதாகவும் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவில் பணியாளர் பற்றாக்குறை

தற்போது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மட்டுமே ஒப்பீட்டளவில் திறம்பட இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5,000 வெளிநோயாளர்களுக்கு சேவை வழங்கும் நிலையில் நான்கு தாதிய உத்தியோகத்தர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும், இதனால் நோயாளர்களுக்கு சேவை வழங்குவதில் பணியாளர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை வசதிகள் இல்லை

வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை ஆய்வக வசதிகள் இல்லாத காரணத்தினால், தினமும் நோயாளர்களிடமிருந்து பெறப்படும் இரத்த மாதிரிகள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர் முடிவுகள் மறுநாளே கிடைப்பதால், நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை

அவசர மின்தடை நேரங்களில் பயன்படுத்துவதற்காக புதிய மின்பிறப்பாக்கி (Generator) ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ள போதிலும், அதற்கான அறை உரிய முறையில் ஒழுங்கமைக்கப்படாத காரணத்தினால் அதனை முறையாகப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக மின்தடை ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும் கூட, மின்பிறப்பாக்கியை உரிய முறையில் இயக்க முடியாததால் நோயாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நோயாளர் நலன்புரி சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வைத்திய அதிகாரியின் பதில்

இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரி ஒருவர் பதிலளித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் விளக்கமளித்த அவர், சில விடயங்கள் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுடன் தொடர்புடையவை எனத் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை ஆயிரக்கணக்கான மக்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வரும் நிலையில், வைத்தியசாலையின் ஆளணி, மருத்துவ உபகரணங்கள், ஆய்வக வசதிகள், மகப்பேற்று சேவைகள் மற்றும் அவசரகால மின்சார வசதிகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, வைத்தியசாலையை முழுமையான சேவைகளுடன் மீளச் செயற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் நோயாளர் நலன்புரி சங்கத்தினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

 

Share this on WhatsApp
Tags: VVT
சேரன்

சேரன்

Related Posts

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் – 05.10.2026 அன்று வல்வெட்டித்துறையில்

by சேரன்
02/10/2026
0

அன்பான உறவுகளுக்கு! இந்திய இலங்கை கூட்டுச்சதியில் ஆகுதியாகிய குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 39வது நினைவுதினம் அவர்களுடைய வித்துடல் தகனம் செய்யப்பட்ட வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில்...

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கத்தின் 89வது இரத்ததான நிகழ்வு

by சேரன்
02/10/2026
0

வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 89 வது இரத்ததான நிகழ்வானது 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால் திருமண மண்டபம் நெடியகாடு வல்வெட்டித்துறையில் நடைபெறும். இந்த...

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை வல்வெட்டித்துறையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

by சேரன்
24/09/2026
0

அதிபர் திரு. இ. சுதர்சன் அவர்களின் தலைமையில் தையல் பகர் அரங்கத்தில் நேற்று கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த செல்வன்...

வல்வெட்டித்துறைச் சந்தியில் தியாக தீபம் திலீபன் ஊர்தி அஞ்சலி நிகழ்வு

வல்வெட்டித்துறைச் சந்தியில் தியாக தீபம் திலீபன் ஊர்தி அஞ்சலி நிகழ்வு

by சேரன்
24/09/2026
0

வல்வெட்டித்துறைச் சந்தியில் தியாக தீபம் திலீபனின் நினைவைப் போற்றும் வகையில் ஊர்தி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு, திலீபனின் நினைவுக்கு...

வல்வெட்டித்துறை ஆலடியில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

வல்வெட்டித்துறை ஆலடியில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

by சேரன்
18/09/2026
0

வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில், தலைவர் பிரபாகரனின் இல்லத்திற்கு அருகாமையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பந்தல் அமைக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. கடந்த 15.09.2026 முதல் அமைக்கப்பட்டிருந்த...

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

by சேரன்
19/08/2026
0

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...

Next Post
லண்டன் மோர்டனில் சித்தர்கள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

லண்டன் மோர்டனில் சித்தர்கள் மற்றும் ஆன்மிகம் தொடர்பான நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Other Posts

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை – மறைவு அறிவித்தல்

02/10/2026
மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்-திரு மகாதேவன் (தேவன்) மாணிக்கவிநாயகம்

01/10/2026
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. மகாதேவன் மாணிக்கவிநாயகம் அவர்கள் லண்டனில் சிவபதம் அடைந்தார்

01/10/2026
வல்வெட்டித்துறைச் சந்தியில் தியாக தீபம் திலீபன் ஊர்தி அஞ்சலி நிகழ்வு

வல்வெட்டித்துறைச் சந்தியில் தியாக தீபம் திலீபன் ஊர்தி அஞ்சலி நிகழ்வு

24/09/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.