வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழக மென்பந்தாட்ட தொடர்
வீனஸ் அணியினை வீழ்த்தியது வல்வை அணி

வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகமானது அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையிலான மாபெரும் லீக் முறையிலான மென்பந்தாட்ட தொடர் ஒன்றினை நடாத்தி வருகிறது..அந்த வகையில் வல்வை அணியானது லலீக் சுற்றின் தனது 9 ஆவது போட்டியில் பருத்தித்துறை வீனஸ் அணியினை நேற்றைய தினம் ( 26/03/2022) எதிர்கொண்டது.. முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை அணியானது தனது நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர் முடிவில் 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது..துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ருதேஷா 25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்
67 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய வீனஸ் அணியானது வல்வை அணியின் துல்லியமான பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 57 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 9 ஓட்டங்களினால் தோல்வியினை தழுவியது.. வல்வை அணி சார்பாக றொசான் 1.1 பந்துபரிமாற்றம் வீசி 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்..போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவு செய்யப்பட்டார்.. இந்த வெற்றியோடு வல்வை அணியானது இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியினை பெற்றுள்ளது.
வல்வை அணியானது தனது இறுதி லீக் ஆட்டத்தின் குரும்பசிட்டி உதயசூரியன் அணியினை எதிர்வரும் 02.04.2022 அன்று எதிர்கொள்ளவுள்ளது…










