பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் வல்வையை சேர்ந்த அகிலன் கருணாகரன் அவர்கள் அயர்லாந்தில்(டப்ளின்) 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடந்த கராத்தே உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். இதில் 36 நாடுகளில் இருந்து 2254 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். kumiteக்கான போட்டியில் 66 போட்டியாளர்கள் பங்கு பற்றிய பிரிவில் விளையாடி முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கதக்கத்தை பெற்றுக் கொண்டதுடன் இந்த ஆண்டுக்கான உலக சம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். 2014ல் போலந்து நாட்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் இவர் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். 2015ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இவர் kumite விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றுக் கொண்டார்.

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...












