பராட்டி வாழ்த்துகின்றோம்💐 வாணிஶ்ரீ ஜெயகணேஸ் யா/ வல்வை மகளீர் மகா வித்தியாலய ஆசிரியை திருமதி. வாணிஸ்ரீ ஜெயகணேஸ் அவர்கள் 2018 ஆம் ஆண்டிற்குரிய நல்லாசிரியராகத் தெரிவு செய்யப்பட்டு மாகாண கல்வி அமைச்சினால் இன்று குரு பிரதிபா பிரபா விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். திருமதி. வாணிஸ்ரீ ஜெயகணேஸ் அவர்கள் பல வருடங்களாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்தவராக விளங்குவது குறிப்பிடத்தக்கது. அவர் மென்மேலும் பல விருதுகளை,பெற வல்வை நலன்புரி சங்கங்கள் vvtuk.com இணையம் மற்றும் வல்வெட்டித்துறை மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். <img src="http://www.vvtuk.com/wp-content/uploads/2018/12/FB_IMG_1544790300215.jpg" alt="" width="960" height="960" class="aligncenter size-full wp-image-260882" /> <img src="http://www.vvtuk.com/wp-content/uploads/2018/12/FB_IMG_1544790306476.jpg" alt="" width="720" height="960" class="aligncenter size-full wp-image-260883" />