வீட்டை சுமந்துகொண்டு 435 கிலோமீற்றர் தூரம் நடந்த நபர்

சீனாவைச் சேர்ந்த ஒருவர் தான் வசிக்கும் வீட்டை தோளில் சுமந்து 435 கிலோமீற்றர் தூரம் நடந்துள்ளார்.

குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த லியூ லிங்சாவோ எனும் இந்நபர் இடத்துக்கிடம் கொண்டு செல்லக்கூடியதாபக மூங்கில்கள் மற்றும் பொலிதீனினால் தனது வீட்டை உருவாக்கியுள்ளார்.

60 கிலோ எடையு;ளள இந்த வீட்டை தான போகுமிடமெல்லாம்சுமந்து செல்கிறார் 38 வயதான லியூ லிங்சாவோ.

‘நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் தங்குமிட பிரச்சினை எனக்கில்லை நான் சுதந்திரமானவனாக உள்ளேன்’ என்கிறாh லியூ.

இவ்வீடு சுமார் வருடகாலமே பயன்படுத்தக்கூடியது எனவும் மூன்றாவது தடவையாக இத்தகைய வீட்டை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர் நடந்து செல்லும் போது வீதியோரங்களில் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள் முதலானவற்றையும் எடுத்து விற்பனை செய்வதன் மூலம் சூழலை சுத்தப்படுத்துவதன் மூலம் தனக்கும் வருமானம் தேடிக்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *