அஞ்சலி அறிவித்தல்
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை அரசடி–நெடியகாடு, மயிலியதனை, கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வசித்தவரும், அனைவராலும் அன்புடன் “தம்பி – அண்ணா” என்று அழைக்கப்பட்டவருமாகிய
திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்கள்
20.09.2026 ஞாயிற்றுக்கிழமை, புரட்டாதி மாத வளர்பிறை தசமி திதியில், இறைவனடி எய்தினார்.
அன்னார்…
காலஞ்சென்றவர்களான நடராஜா (ராசதுரை) – தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திருமதி ராணிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
அமரர் மாவீரர் குமுதினி (பிரியங்கா), சாந்தினி (கனடா), நந்தினி (லண்டன்), ஜமுனா (லண்டன்), மகேந்திரகுமார் (மாச்சா – லண்டன்), தவச்செல்வி (அம்மன் – சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
பிரபாகரன் (கோபி – கனடா), காலஞ்சென்ற அமரர் செல்வச்சந்திரன் (செல்வன் – லண்டன்), கணேசலிங்கம் (பாபு – லண்டன்), ஜெயந்தி (லண்டன்), பாலசேகர் (பாலையா – சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுவேனியா, அனோஜன், கௌதம், தனுஜன், அபிராமி, சஞ்சீவ், அபிநயா, மயூரா, தீபக், தீபிகா, அரவிந்த், பூவரசன், சகானா, திருமொழி, அர்ஜுன், சாருகன், வினோத், தனுஷன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
நிலா, இனியா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரமூர்த்தி, தணிகாசலம் (கலாநிதி ஸ்டோர்ஸ்), திருநாவுக்கரசு (சந்திரா ஸ்டோர்ஸ்), சுந்தரமூர்த்தி, ஜெயலக்ஷ்மி (தங்கன்), தங்கராசா (தங்கராசா கடை – வல்வெட்டித்துறை), ராமச்சந்திரன் (ராமு கடை – வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான காந்திமதி, குகதாஸ், சோதிமதி, பூலோகசுந்தரி, மெஞ்ஞானமாலை, தையல்நாயகி, யோகராஜா, சின்னத்துரை, சந்திரசேகரம், ஜெயமணிதேவி, ராஜேஸ்வரி, இந்திராணி, பேரின்பநாயகி, சுலோசனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தம்பதிகளான சுந்திரலிங்கம் – இந்திராதேவி – சாரதாதேவி, சிவகணேசன் – மகமாசிஅம்மா, முத்துலிங்கம் – சிவகாமசுந்தரி, கணேசரத்தினம் – பிறேமாவதி, காலஞ்சென்ற சோதிநாராயணசாமி (பரஞ்சோதி அப்பா) மற்றும் பாருபதிதேவி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
இறுதிக்கிரிகைகள் | Final Rites
📅 ஞாயிற்றுக்கிழமை, 04 ஒக்டோபர் 2026
🕣 காலை 8:30 மணி – நண்பகல் 12:00 மணி வரை
📍 Thomas Wall Centre
52 Benhill Avenue
Sutton
SM1 4DP
United Kingdom
வழிகாட்டி:
Get Directions – Thomas Wall Centre
தகனம் | Cremation
📅 ஞாயிற்றுக்கிழமை, 04 ஒக்டோபர் 2026
🕝 பிற்பகல் 2:20 மணி முதல்
📍 South London Crematorium
Rowan Road
Streatham
London
SW16 5JG
United Kingdom
வழிகாட்டி:
Get Directions – South London Crematorium
தொடர்புகளுக்கு
மகேந்திரகுமார் – மகன்
📞 +44 7950 285251
சதாசிவம் (ஐயாச்சி) – பெறாமகன்
📞 +94 75 958 7834
பிரபாகரன் (கோபி) – மருமகன்
📞 +1 514 594 6563
கணேசலிங்கம் (பாபு) – மருமகன்
📞 +44 7727 046074
பாலசேகர் (பாலையா) – மருமகன்
📞 +41 78 767 18 35
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய தெய்வங்களைப் பிரார்த்திப்போம்.
தகவல்: குடும்பத்தினர்










