மஹோற்சவப் பெருவிழாவின் பதினோராம் நாள் மாலைத் திருவிழா – 22.08.2026
செல்வச்சந்நிதி வேற்பெருமானின் மஹோற்சவப் பெருவிழாவின் பதினோராம் நாள் மாலைத் திருவிழா இன்று 22.08.2026 பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இந்நாளில் அற்புதமான வேல்வடிவ அலங்காரத்தில் அருட்காட்சி தந்த வேற்பெருமானை, பெருமளவான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.
ஆலயத்தில் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பக்தர்கள் “அரோகரா!” எனும் பக்திக் கோஷங்களை எழுப்பி வேற்பெருமானின் திருவருளைப் பெற்றனர்.
மஹோற்சவத் திருவிழாவின் இன்றைய மாலை நிகழ்வு பக்தர்களுக்கு சிறப்பான ஆன்மிக அனுபவமாக அமைந்தது.




















