வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஊடாக 89 வது இரத்ததான நிகழ்வானது 04/10/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் கணபதி மஹால் திருமண மண்டபம் நெடியகாடு வல்வெட்டித்துறையில் நடைபெறும்.
இந்த இரத்ததான நிகழ்வில் பருத்தித்துறை இரத்த வங்கி வைத்தியத் துறையினர் குருதி சேகரிப்பில் பங்கேற்பாளர்கள்.
மேலும் இந்த இரத்ததான நிகழ்வுக்கு 18 வயதிற்கு மேற்பட்ட 55 வயதிற்கு உட்பட்ட குருதிக் கொடை வழங்க விரும்பும் அனைவரும் வருகை தந்து குருதிக் கொடை வழங்க முடியும்.
அதைவிட நீங்கள் ஏற்கனவே குருதிக் கொடை வழங்கி இருந்தால் 60 வயதுவரை குருதிக் கொடை வழங்க முடியும்.
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் ஆகிய நாம் பரந்து விரிந்து யாழ் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இருந்து குருதிக் கொடையாளர்களை குருதிக் கொடை வழங்க உள்வாங்கி எம்முடன் இணைந்து பயணிப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைகிறோம்.
89 வது இரத்ததான நிகழ்விற்கான இரத்ததான அனுசரணை வழங்கும்
” Valvai wings 1998 Nanbarkal “
மேலும் இந்த இரத்ததான நிகழ்வில் குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்விக்கு உதவும் வகையில் அழகான புத்தகப்பை அனைவருக்கும் கௌரவமான முறையில் தம்பிகளால் வழங்கப்படும் நன்றி.
வல்வெட்டித்துறை இரத்ததானச்சங்கம் தலைவர்
பா. வீரசுரேந்திரன்
0779911131










